இன்றைய விம்பம் பகுதியில் மன்னார் வங்காலை ஊடாக மறிச்சிகட்டி புத்தளம் வரையான பாதை புனரமைப்பு தொடர்பான தகவலுடன் -படங்கள்
மன்னார் வங்காலை ஊடாக மறிச்சிகட்டி புத்தளம் வரையான பாதை புனரமைப்புக்கென 9,887,500,000,00 ரூபா ஒதுக்கீடு
வடக்கில் வீதிகள் புனரமைப்பு திட்டத்தின் கீழ் மன்னார் வங்கலை ஊடாக மறிச்சிக்கட்டி புத்தளம் வரையிலான பாதை புனரமைக்கப்பட்டு வருகிறது.
கடந்தகாலங்களில் இப் பாதை மிக மோசமான முறையில் சேதமடைந்து காணப்பட்டது. இந்நிலையில் குறித்தப்பாதையினை புனரமைப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கான வேலைகள் தற்ப்பொழுது முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைள் அமைச்சு, வீதி அபிவிருத்தி அதிகாரசபை ஆகியன இணைந்து சீன நிதியுதவியுடன் இவ் அபிவிருத்திப்பணிகளை முன்னெடுத்து வருகின்றன.
சுமார் 113 கி.மீ நீளமுடைய இப்பாதை புனரமைப்புக்கும் தரமுயர்த்துவதற்குமென சுமார் 9,887,500,000,00 ரூபா செலவிடப்படவுள்ளது.
கடந்த 2012 ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இவ் வேலைத்திட்டம் எதிர்வரும் 2015 ல் நிறைவடையவுள்ளன.
இப் பாதை போக்குவரத்திற்கென திறந்துவைக்கப்படுமிடத்து மன்னாரிலிருந்து கொழும்பு செல்ல சுமார் 1:30 மணித்தியாலங்கள் வரை மீதமாக்கப்படும்
இன்றைய விம்பம் பகுதியில் மன்னார் வங்காலை ஊடாக மறிச்சிகட்டி புத்தளம் வரையான பாதை புனரமைப்பு தொடர்பான தகவலுடன் -படங்கள்
Reviewed by Author
on
January 05, 2014
Rating:

No comments:
Post a Comment