அண்மைய செய்திகள்

recent
-

குடிநீர் வழங்கப்படாமையினை கண்டித்து மன்னார் முசலி-வெளிமலை மக்கள் ஆர்ப்பாட்டம் - படங்கள்


இன்று காலை முசலி பிரதேச சபைக்கு முன்னால் வெளிமலை கிராமத்தில் உள்ள மக்களுக்கு பிரதேச சபையினால் கடந்த 5 நாட்களாக குடி நீர் வழங்கப்படாமையினை கண்டித்தும் குடிநீர் வழங்குமாறும் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குடிநீர் பிரச்சினை வழங்கப்படாமை தொடர்பாக பல முறை பிரதேச சபை செயலாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தும் இவ்விடயம் தொடர்பாக யாரும் கரிசனை கொள்வதாக இல்லை 

குறித்தபிரதேசத்தில் இருந்து அயல் கிராமங்களுக்கு பவுஸர்கள் மூலம் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது இருந்தும் பிரதேச சபைகளில் கடமையாற்றும் சில ஊழியர்களின் அசமந்தப்போக்கினால்  இக்கிராமாத்தில் உள்ள மக்களுக்கு நீர் வழங்குவதில் தாமதம் ஏற்படுகிறது. 

இவ்விடயம் குறித்து பிரதேச சபை செயலாளர் மற்றும் தவிசாளர் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதைத்தொடர்ந்து இப்பிரச்சினைக்கான தீர்வை வெகு விரைவில் தாம் எடுப்பதாக பிரதேச சபை தவிசாளார் உறுயளித்துள்ளார்.  







எஸ்.எச்.எம்.வாஜித்

குடிநீர் வழங்கப்படாமையினை கண்டித்து மன்னார் முசலி-வெளிமலை மக்கள் ஆர்ப்பாட்டம் - படங்கள் Reviewed by Admin on January 01, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.