வட மாகாண கல்வி அமைச்சினால் முறைசார கல்விப் பிரிவை அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கீடுகள்.
வட மாகாண கல்வி அமைச்சினால் பாடசாலையை விட்டு விலகிய மாணவர்களின் எதிர்கால
நன்மை கருதி முறைசார கல்விப் பிரிவை அபிவிருத்தி செய்யவும் ஊக்குவிக்கும் வகையிலும் நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதாக வட மாகாண கல்வி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார் .
கடந்த காலங்களைவிட இம்முறை முறைசாரக் கல்விப் பிரிவின் செயற்பாடுகள் விரிவடையவுள்ளதுடன் வட மாகாண கல்வி அமைச்சுக்கு உட்பட்ட பன்னிரெண்டு கல்வி வலயங்களிலும் பயிற்சி நெறிகளும் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இம்முறை முதல் கட்டமாக கணனி பயிற்சி நெறி , மனைப் பொருளாதாரமும் முகாமைத்துவமும் பயிற்சி நெறி , உடை அமைத்தல் ஒட்டுதல் ( வெல்டிங் ) , மணப் பெண் அலங்காரம் , குழாய் பொருத்துதல் போன்ற பயிற்சி நெறிகள் ஆரம்பிக்கப்பட்டு பாடசலைகளை விட்டு விலகிய மற்றும் இடை விலகிய மாணவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார் .
வட மாகாண கல்வி அமைச்சினால் முறைசார கல்விப் பிரிவை அபிவிருத்தி செய்ய நிதி ஒதுக்கீடுகள்.
Reviewed by NEWMANNAR
on
January 21, 2014
Rating:

No comments:
Post a Comment