யாழ் – முல்லைத்தீவு கடற்கரையோர மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்
பலம்வாய்ந்த தாழமுக்கம் ஊடறுத்து செல்லும் சாத்தியம் உள்ளதால் யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களின் கடற்கரையிலிருந்து 100 மீற்றருக்குட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு இடர் முகாமைத்துவ நிலையம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
யாழ். மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவினர் ஊடாக இது குறித்து மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் மணித்தியாலத்திற்கு 100 கிலோமீற்றர் வரை வேகத்தில் காற்று வீசலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்
இதன் காரணமாக கடல் அலை மூன்று மீற்றர் வரை உயரலாம் எனவும் இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது
யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் தொடர்ந்தும் கடற்றொழிலை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டை அண்மித்த கடற்பரப்பில் தற்போது காணப்படுகின்ற தாழமுக்கம் வலுபெற்று இன்று யாழ். குடாநாட்டை அல்லது அதனை அண்மித்த பகுதியை ஊடறுத்து செல்வதற்கான சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது திருகோணமலைக்கு கிழக்கே 200 மீற்றர் தொலைவில் இந்த தாழமுக்கம் நிலைகொண்டுள்ளதாகவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
யாழ் – முல்லைத்தீவு கடற்கரையோர மக்களை அங்கிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல்
Reviewed by Admin
on
January 05, 2014
Rating:

No comments:
Post a Comment