எலும்புக்கூடுகள் உள்ள பகுதியின் எல்லையை கண்டறிய முடியவில்லை: டி.எல்.வைத்தியரட்ண -படங்கள்
எலும்புக்கூடுகள் உள்ள பகுதியின் எல்லையை கண்டறிய முடியவில்லை: டி.எல்.வைத்தியரட்ண
திருக்கேதீஸ்வரத்தில் மீட்கப்பட்டுள்ள எலும்புக்கூடுகள் எக்காலத்தை சேர்ந்தது அவை எவ்வாறு நடைபெற்றது என்பதை அறிய நீண்ட காலம் எடுக்கும் என்பதோடு எலும்புக்கூடுகள் காணப்படும் பகுதியின் எல்லையை நாம் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று டி.எல்.வைத்தியரட்ண தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் எலும்புக்கூடுகள் தொடர்ந்து கண்டெடுக்கப்பட்டு வருகின்றது. ஆனால் சம்பவம் தொடர்பான தடயபொருட்கள் இது வரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என தெரிவித்தார்.
திருக்கேதீஸ்வரத்தில் இன்று 10வது தடவையாக மனித எச்சங்களை தேடும்பணி இன்று காலை 8:30 மணிமுதல் 2 மணிவரை மன்னார் மாவட்ட நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில் நடைபெற்றது.
இதன் போது இன்றைய நாளுக்கான மனித எச்சங்கள் தேடி கண்டறியும் பணி 2மணியளவில் நிறைவடைந்ததின் பின் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மன்னார் திருக்கேதீஸ்வரப் பகுதியில் கண்டு பிடிக்கப்பட்ட மனித புதைகுழியை ஒன்பதாவது தடவையாக கடந்த 18.01.2014 சனிக்கிழமை அன்று மனித எச்சங்களை தேடி கண்டறியும் பணி நடைபெற்றபோது இரண்டு மண்டை ஓடுகளும் மற்றும் சில மனித எச்சங்களும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக் கூட்டின் தொகை முப்பத்தொன்பதாக அதிகரித்திருந்தது
இன்நிலையில் குறித்த பகுதியிலிருந்து மேலும் சில மனித எச்சங்கள் கhணப்படுவதை அவதானித்த நிலையில் குறித்த மனித எச்சங்களுள்ள பகுதியை சற்று விஸ்தரிக்கும் பணி மன்னார் மாவட்ட நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் முன்நிலையில் நேற்று திங்கழ்கிழமை காலை 8:30 முதல் பகல் 1மணிவரை நடைபெற்றது.
இன்நிலையில் மன்னார் மாவட்ட நீதிமன்ற நீதிபதி உத்தரவிற்கு அமைவாக இன்று செவ்வாய்க்கிழமை குறித்த மனித எச்சங்களை கண்டறியும் பணி நடைபெற்றது.
எனினும் இன்று எச்சங்கள் எதுவும் முழுமையாக கண்டுபிடிக்கப்படாத நிலையில் குறித்த மனித எச்சங்களை தேடி கண்டறியும் பணி பகல் 2 மணியுடன் நிறுத்தப்பட்டதுடன் மீண்டும் நாளை குறித்த மனித எச்சங்களை தேடும்பணியை தொடர நீதிபதி செல்வி ஆனந்தி கனகரெட்ணம் உத்தரவிட்டார்.

Reviewed by Author
on
January 21, 2014
Rating:
No comments:
Post a Comment