அண்மைய செய்திகள்

recent
-

பள்ளிவாசல்களை தாக்குமாறு புத்தர் போதிக்கவில்லை:

உள்ளூராட்சி சபைகளில் வரவு செலவுத் திட்டங்கள் தோல்வியடைவதன் மூலம் அரசாங்கம் வீழ்ந்து வருவதை காண முடிவதாக நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நேற்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், 

நாட்டில் போதைப் பொருள், மது பெருமளவில் பரவி வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பிரதமர் கூட போதையாளராக மாற்றப்பட்டார். 

அத்துடன் அரசாங்கத்தின் பிரதானமான வருவாய் ஈட்டும் வழிமுறையாக கசினோ சூதாட்டம் மாறியுள்ளது. உலக முழுவதிலும் விலை மாதர்களை அழைத்து வந்து இலங்கையில் விபச்சாரம் செய்து வருகின்றனர். 

இனவாதம், மதவாதம், வன்முறை சேனா போன்ற அமைப்புகள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் கீழ் இயங்கி வருபவை. இவர்கள் மூலமாக முஸ்லிம் மக்களுக்கு எதிராகவும் கிறிஸ்தவர்களுக்கு எதிராக குழப்பங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. 

இலங்கையின் கிறிஸ்தவ சங்கங்களின் குரல் ரோமில் உள்ள பாப்பாண்டவர் வரை சென்றுள்ளது. ஏனைய மதங்களின் வணக்கஸ்தலங்களை தாக்குமாறு புத்த பகவான் என்றும் போதித்ததில்லை. 

இலங்கையில் நடைபெறும் சில சம்பவங்களால் புத்த மதம் மிலேச்சத்தனமான மதம் சில வெளிநாட்டினர் கருதுகின்றனர் என்றார். 

இந்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய மத்திய மாகாண சபை உறுப்பினர் அசாத் சாலி, 

இதுவரை 20க்கும் மேற்பட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள் உடைக்கப்பட்டுள்ளன. இந்த பள்ளிவாசல்களில் போதைப் பொருள் வியாபாரம் நடப்பதாக நினைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர். 

2014 ஆம் ஆண்டு ஆரம்பமாகியுள்ள நிலையில், மக்கள் தமது பிள்ளைகளுக்கு பாலை பருக்க முடியாத சூழ்நிலையில் உள்ளனர். 2013 ஆம் ஆண்டின் இறுதியில் ஹெரோயின் போதைப் பொருள் பற்றியே அதிகமாக பேசப்பட்டது என்றார். 
பள்ளிவாசல்களை தாக்குமாறு புத்தர் போதிக்கவில்லை: Reviewed by Author on January 02, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.