அண்மைய செய்திகள்

recent
-

மேலும் 26 தமிழக மீனவர்கள் கைது?

தமிழகத்தை சேர்ந்த மேலும் 26 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

கடந்த 29-ம் திகதி புதுக்கோட்டை ஜெகதாபட்டிணம், கோட்டைபட்டிணம் பகுதிகளில் இருந்து மீன்பிடிக்க சென்ற தமிழக மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைதுசெய்ததோடு, 6 படகுகளையும் இழுத்து சென்றனர். 

அதற்கு மறுநாள் 30-ம் திகதி பாம்பன் மீனவர்கள் 18 பேரை கைதுசெய்தனர். 

இந்த பரபரப்பு சம்பவம் அடங்குவதற்குள் மண்டபத்தைச் சேர்ந்த 26 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைதுசெய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. 

நான்கு படகுகளில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த அவர்களை, இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்றதுடன், படகுகளையும் பறிமுதல் செய்ததாக தமிழக செய்திகள் குறிப்பிடுகின்றன. 

இதன்படி கடந்த ஒரு வாரத்திற்குள் 3 தடவை இலங்கை கடற்படையினர், தமிழக மீனவர்களை கைதுசெய்துள்ளமை மீனவர்களை கவலையடையச் செய்துள்ளதாக தெரிகிறது. 

எனினும் இது தொடர்பில் தமக்கு எந்தவித தகவலும் கிடைக்கப் பெறவில்லை என இலங்கை கடற்படை பேச்சாளர் கோசல வர்ணகுல சூரிய குறிப்பிட்டுள்ளார். 

மேலும் 26 தமிழக மீனவர்கள் கைது? Reviewed by Author on January 03, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.