City Zoo ஆக தரமுயர்த்தப்பட்ட தெஹிவளை மிருகக் காட்சிச்சாலை - படங்கள்
தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலை சிற்றி ஸூ எனத் தரமுயர்த்தப்படவுள்ளதாகத் தெரிவித்த தேசிய தாவரவியல் பூங்கா மற்றும் விலங்கியல் பூங்காங்களின் திணைக்களப் பணிப்பாளர் நாயகம் டாக்டர் சிறில் விஜேயசுந்தர இதனால் அம்பாந்தோட்டை, பின்னவல மற்றும் பிலியந்தலை என்பவற்றிலுள்ள விலங்கியல், தாவரவியல் பூங்காக்களுக்கு எவ்வித எதிர்மறை விளைவுகளும் ஏற்பாடது எனவும் கூறினார்.
தெஹிவளை மிருகக் காட்சிச்சாலை மற்றும் பின்னவல மிருகக்காட்சிசாலை என்பவற்றைப் பார்வையிட்டுள்ளவர்களின் எண்ணிக்கை கடந்த 2012 ஆம் ஆண்டைவிடவும் 2013 ஆம் ஆண்டு அதிகரித்துள்ளது.
தெஹிவளை மிருகக் காட்சிசாலையை 18,66,950 சுற்றுலாப்பயணிகளும் பின்னவல மிருகக்காட்சிசாலையை 305,860 சுற்றுலாப்பயணிகளும் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் அதிக வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.
இது தவிர, அண்மையில் திறக்கப்பட்ட மிரிஜவல வறள் வலய தாவரவியல் பூங்காவை 10,750 சுற்றுலாப்பயணிகள் பார்வையிட்டுள்ளனர். இதன் மூலம் 640,800 ரூபா வருமானமாக கிடைத்துள்ளது.
அத்துடன், கடந்த வருடம் 2 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டிலுள்ள தேசிய தாவரவியல் பூங்காக்களைப் பார்வையிட்டுள்ளனர்
ஹக்கலை, பேராதனை மற்றும் கம்பஹா – கெனரத்கொட ஆகிய தேசிய தாவரவியல் பூங்காக்களை சுமார் 2,076,523 சுற்றுலாப்பயணிகள் பார்வையிட்டுள்ளனர். இவர்களில் 2,93,454 ேபர் ெவளிநாட்டு உல்லாசப் பயணிகளாவர்.
தாவரவியல் பூங்காக்களை அதிகளவிலான சுற்றுலாப்பயணிகள் பார்வையிட்டுள்ளதன் மூலம் கடந்த 2012 ஆம் ஆண்டை விடவும் 2013 ஆம் ஆண்டு அதிக வருமானம் திணைக்களத்திற்கு கிடைத்துள்ளது.
இதன்மூலம் 416.5 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதுடன், இவற்றில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடமிருந்து 314.8 மில்லியன் ரூபர் கிடைத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
City Zoo ஆக தரமுயர்த்தப்பட்ட தெஹிவளை மிருகக் காட்சிச்சாலை - படங்கள்
Reviewed by NEWMANNAR
on
February 03, 2014
Rating:

No comments:
Post a Comment