மன்னார் மீன் வியாபாரிகள் பாதிப்பு
நாளாந்தம் தலைமன்னார் பேசாலை பகுதியிலிருந்து கொழும்பு சுப்பர் மார்க்கட்டுக்கு மீன் ஏற்றிச்செல்லுகின்ற லொறி ஒன்றைறை பொலிசார் நீண்ட நேரமாக தடுத்து வைத்து சோதனையிட்டதால் அவ் லொறி கொழும்பு செல்லாது மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு திரும்பியதால் மீனவர்கள் பலர் இதனால் பெரும் நஸ்டத்துக்கு உள்ளாகியுள்தாக தெரிவிக்கின்றனர்.
இவ் சம்பவம் மன்னாரில் வெள்ளிக் கிழமை (7.2.14) மன்னாரில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இதுபற்றி தெரியவருவதாவது வெள்ளிக் கிழமை இரவு 10 மணியளவில் தலைமன்னார் பேசாலை பகுதியிலுள்ள மீனவர்களின் மீன்களை சேகரித்துக் கொண்டு வழமைபோன்று பேசாலை காட்டாஸ்பத்திரியிலிருந்து புறப்பட்ட அகிலா என்ற மீன் லொறியை மன்னார் பாலத்தடியில் வைத்து பொலிசார் இடை மறித்து சோதனையிட்டுள்ளனர்.
இவ் லொரியில் 210 மீன் பெட்டிகள் ஏற்றிச் செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப் படுகிறது.
ஏற்றிச் சென்ற மீன் பெட்டிகளை கீழே இறக்கி நீண்ட நேரமாக சோதனையிட்டதால் நேரம் தாழ்த்தி கொழும்புக்கு மீன்களை கொண்டுச் செல்வதில் பலன் இல்லை என்ற காரணத்தினாலும் மீன்களுக்கான குளிர் தன்மை குறைந்தமையினாலும் கொழும்புக்கு எடுத்துச் சென்ற மீன்கள் மீண்டும் அதே இடத்துக்கு திருப்பிக் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் படுகிறது.
இவ் லொறியில் சென்றவர்களின் கையடக்க தொலைபேசிகளை பொலிசார் கைப்பற்றியதால் சோதனையிடப்பட்ட மீன் பெட்டிகளை வேறொரு லொரியிலாவது ஏற்றி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள முடியவில்லை என இதன் ரான்ஸ்போட் உரிமைளார் தெரிவித்தார்.
இவ் மீன் லொரியில் போதை வஸ்து எடுத்துச் செல்வதாக இரகசிய தகவல் கிடைக்கப் பெற்றதைத் தொடர்ந்தே இவ் மீன் லொரியை கடும் பரிசோதனைக்கு உட்படுத்தியதாக பொலிஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
மன்னார் மீன் வியாபாரிகள் பாதிப்பு
Reviewed by Author
on
February 08, 2014
Rating:

No comments:
Post a Comment