மாயமான மலேஷிய விமானம் குறித்த மர்மம் நீடிப்பு
காணாமல் போன மலேஷிய விமானத்தை தேடும் பணிகளில் உதவும் பொருட்டு அமெரிக்கா தனது கண்காணிப்புக் குழுக்களை இந்து சமுத்திரத்திற்கு அனுப்பியுள்ளது
குறித்த மலேஷிய விமானம் நீண்ட நேரம் இந்து சமுத்திரத்தின் மேலாக பயணித்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது
விமானம் காணமற்போவதற்கு முன் ஐந்து மணித்தியாலங்களுக்கு செய்மதிக்கு சமிக்ஙை அனுப்பியுள்ளதாக பெயர் குறிப்பிடாத அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்த தகவல் திட்டவட்டமானது அல்லவென விமானம் காணாமல் போனமை தொடர்பில் விசாரணை செய்யும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கடந்த சனிக்கிழமை 229 பயணிகளுடன் காணாமல் போன குறித்த விமானத்தின் பாகங்களை கண்டறிவதில் மீட்பு பணியாளர்கள் தொடர்ந்தும் தோல்வி கண்டுவருகின்றனர்.
மாயமான மலேஷிய விமானம் குறித்த மர்மம் நீடிப்பு
Reviewed by NEWMANNAR
on
March 15, 2014
Rating:

No comments:
Post a Comment