அண்மைய செய்திகள்

recent
-

ஜெயக்குமாரி, விபுசிகாவை விடுதலை செய்யக்கோரி இன்று ஆர்ப்பாட்டம்

பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ள ஜெயக்குமாரி அவரது மகள் விபுசிகாவையும் விடுதலை செய்யக்கோரி இன்று சனிக்கிழமை காலை 11 மணிக்கு வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தரும்புரம், கிளிநொச்சியிலுள்ள முசலம்பிட்டி வீட்டுத்திட்டத்தில் வசிக்கும் பாலேந்திரன் ஜெயக்குமாரி, மற்றும் அவரது மகள் விபுசிகா பாலேந்திரன்(13வயது) ஆகிய இருவரும் நேற்று முன்தினம் 13 ஆம் திகதியன்று  பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்களது நீதிக்குப் புறம்பான கைதுகளைக் கண்டித்தும் அவர்கள் இருவரதும் உடனடியான விடுதலைக்கு சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரியும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை நடாத்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்போராட்டம் வவுனியா பஸ் தரிப்பு நிலையம் முன்பாக காலை 11.00 மணி - 12.00 மணிவரை இடம்பெறவுள்ளது.

இப்போராட்டத்தில் சகல வேறுபாடுகளையும் மறந்து அனைவரையும் கலந்து கொண்டு ஜெயக்குமாரியினதும் அவரது சிறிய மகளுடையதும் விடுதலைக்கு வலுச் சேர்க்குமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
ஜெயக்குமாரி, விபுசிகாவை விடுதலை செய்யக்கோரி இன்று ஆர்ப்பாட்டம் Reviewed by NEWMANNAR on March 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.