அண்மைய செய்திகள்

recent
-

மெத்தா நிறுவனத்தின்; நடமாடும் சேவை கிளிநொச்சி, முல்லைத்தீல் 23 முதல் நடைபெறுகிறது

உடல் அவயவங்களை இழந்தவர்களுக்கான விசேட நடமாடும் சேவை இம்மாதம் கிளிநொச்சி , முல்லைத்தீவு மாவட்டங்களில் நடைபெறவுள்ளது.

இதன் படி இம்மாதம் 23ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரையும் நடைபெறவுள்ளது.

அதேபோன்று 24ம் திகதி திங்கட்கிழமை காலை8.00 மணிமுதல் மாலை 4.00 மணிவரை குறித்த நடமாடும் சேவை கிளிநொச்சி கருணை நிலையத்தில் நடைபெறவுள்ளது.

அதேபோன்று 25ம் திகதி செவ்வாய்கிழமை காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணிவரையும்
26ம் திகதி புதன்கிழமை காலை 8.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணிவரை முல்லைத்தீவு கள்ளப்பாடு பகுதியில் மீனவர் கூட்டுறவு சமாசத்திலும் நடைபெறவுள்ளது


மெத்தா நிறுவனம் வடமாகாணத்தில் யுத்தத்தினால் மற்றும் ஏனைய பாதிப்புகளால் பாதிக்கப்பட்டு உடல் அவையவங்களை இழந்த மக்களுக்கு பாரியசேவையினை ஆற்றிவருகிறது.

குறிப்பாக அவயவங்களை இழந்தவர்களுக்கு செயற்கை அவயவங்களை பொருத்தி பாதிக்கப்பட்ட மக்களை முடிந்த அளவிற்கு இயல்பான வாழ்விற்கு எடுத்து செல்வது அதன் நோக்கமாகும்
குறித்த மெத்தா நிறுவத்தின் மன்னார் கிளை மன்னார் பொது வைத்தியசாலையில் ஒரு தனியான பகுதியில் இயங்கிவருகிறது. அவயவங்களை இழந்த மக்கள் இவ் நிறுவனத்தின் செயற்பாடுகளால் பெரிதும் நன்மை அடைந்து வருகின்றனர்

இந்நிலையில் மெத்தா நிறுவனம் தனது சேவையினை பல்வேறு மக்களின் நன்மை கருதி விரிவுபடுத்தி வருகிறது.
இதன் அடிப்படையில் வட மாகாணத்தில் பல பகுதிகளிலும் நடமாடும் சேவையினை நடத்திவருவதோடு நாட்டின் பல பாகங்களிலும் இதன் சேவை விஸ்தரிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.




மெத்தா நிறுவனத்தின்; நடமாடும் சேவை கிளிநொச்சி, முல்லைத்தீல் 23 முதல் நடைபெறுகிறது Reviewed by Author on March 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.