காத்தான்குடியில் ஆணின் சடலம் மீட்பு
காத்தான்குடி, கல்லடி பாலத்திற்கடியில் நீரில் மிதந்த நிலையில் ஆணின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கிடைத்த தகவலுக்கமைய காலை 9.30 அளவில் பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.
காத்தான்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் இன்று அதிகாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து வெளியேறிச் சென்றிருப்பதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீதவான் விசாரணைகளை முன்னெடுப்பதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
மரணத்திற்கான காரணத்தை கண்டறிவதற்கான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
காத்தான்குடியில் ஆணின் சடலம் மீட்பு
Reviewed by NEWMANNAR
on
July 18, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 18, 2014
Rating:


No comments:
Post a Comment