இவர் மொடல் பொம்மையா?அல்லது மனிதனா? குழப்பத்தில் மக்கள்
அமெரிக்காவில் நபர் ஒருவர் மொடல் பொம்மையை போல் ஜவுளிக்கடைகளில் நின்று காட்சியளிப்பதால் அவரை பார்க்கும் மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.
அமெரிக்காவின் அன்றாட நடப்புகளை இணையதளத்தில் விமர்சித்து தனது நகைச்சுவையான எழுத்துக்கள் மூலம் பிரபலமானவர் ஸ்டீவ் வெனகெஸ் என்ற பத்திரிக்கையாளர்.
ஒரு நாள் இவர் தன் மனைவியுடன் துணி வாங்க ஜவுளிக்கடைக்கு சென்றுள்ளார்.
இவர் மனைவி நீண்டநேரமாக ஆடையைத் தேர்வு செய்து கொண்டிருக்க மொடல் பொம்மை அருகே அமர்ந்திருந்த ஸ்டீவ், அந்த பொம்மை தன்னை போலவே இருப்பதை கவனித்துள்ளார்.
உடனடியாக, மனைவிக்கு வேடிக்கைக் காட்ட நினைத்தவர் மொடல் பொம்மை அணிந்திருந்தது போன்ற உடையை தானும் அணிந்து அப்பொம்மையின் அருகே சென்று நின்றுள்ளார்.
அப்போது டைரையல் ரூமிலிருந்து வந்த அவரது மனைவி ஸ்டீவை பார்த்து ஆச்சரியமடைந்துள்ளார்.
மேலும் மொடல் பொம்மையின் அருகே அதைப்போலவே உடையணிந்து நிற்கும் ஸ்டீவைப் பார்த்த கடையிலிருந்த பொதுமக்கள் ஆர்வமாக அவரை புகைப்படம் எடுத்துள்ளனர்.
இது ஸ்டீவை இன்னும் மகிழ்ச்சி ஆழ்த்தியதால் அன்று முதல் எந்தக் கடைக்குச் சென்றால் அங்கிருக்கும் மொடல் பொம்மையைப் போன்றே உடை அணிந்து, அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதை வாடிக்கையாக்க கொண்டுள்ளார்.
ஸ்டீவின் இந்த முயற்சிக்கு கிடைத்த வரவேற்பைப் பார்த்த சில ஜவுளிக் கடைக்காரர்கள் அவரை நடமாடும் மொடல் பொம்மையாக்கி, அவருக்கு சம்பளமும் அளித்து வருகின்றனர்.
இவர் மொடல் பொம்மையா?அல்லது மனிதனா? குழப்பத்தில் மக்கள்
Reviewed by NEWMANNAR
on
July 26, 2014
Rating:

No comments:
Post a Comment