மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை நிறுத்தவும்- ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு கோரிக்கை.
மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.றொசேரியன் லெம்பேட் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதனை நிறுத்தி அவர் தம் கடமையினை சுதந்திரமான முறையில்,இடையூறு இன்றி சரிவர செய்வதற்கு இடமளிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கேட்டுக்கொள்ளுவதாக ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.
மன்னார் மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் எஸ்.றொசேரியன் லெம்பேட் இரண்டாவது தடவையாக கடந்த 14 ஆம் திகதி திங்கட்கிழமை(14-07-2014) கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவிற்கு (ரி.ஐ.டி) அழைக்கப்பட்டு சுமார் 3 மணி நேரம் விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டார்.
இந்த நிலையிலே ஊடகவியலாளர் விசாரனைகளுக்கு உற்படுத்தப்பட்டமையினை கண்டித்தே ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு இன்று ஞாயிற்றுக்கிழமை(20-07-2014) தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் குறித்த அறிக்கையினை வெளியிட்டுள்ளனர்.
குறித்த அறிக்கையினை ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழுவின் செயலாளர் ரங்க ஜயசூரிய,ஏற்பாட்டாளர் சமன் வக ஆரச்சி,செயலாளர் தர்மசிறி லங்காபேலி ஆகியோர் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் மாவட்ட ஊடகவியலாளர் எஸ்.ஆர்.லெம்பேட் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்களை முன்வைப்பதை நிறுத்தவும்- ஊடக சுதந்திரத்திற்கான செயற்பாட்டுக்குழு கோரிக்கை.
Reviewed by NEWMANNAR
on
July 21, 2014
Rating:

No comments:
Post a Comment