அண்மைய செய்திகள்

recent
-

எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் திருடிய பொருட்களுடன் அழகு படுத்தி போட்டோ எடுத்த இளம்பெண்

எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் திருடிய பொருட்களை கொண்டு மேக்-அப் செய்து போட்டோ எடுத்து உக்ரைன் பெண் ஒருவர் சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். இது அனைவரையும் எரிச்சல் அடைய வைத்துள்ளது. டன்ட்ஸ்க் பகுதியை சேர்ந்த எகாத்ரினா என்ற பெண் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் இருந்து திருடப்பட்ட நீல மஸ்கராவை கொண்டு தன்னை அழகு படுத்தி போட்டோ எடுத்து வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். 

அவரது போட்டோவிற்கு கருத்து தெரிவித்தவர்களுக்கு பதில் அளிக்கையில் எகாத்ரினா, இது தனது நண்பர் திருடிகொடுத்ததாக குறிப்பிட்டுள்ளார். நெதர்லாந்து நாட்டின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் நோக்கி வந்து கொண்டிருந்த மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.17, கடந்த 17-ந் தேதி உக்ரைனில் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றியுள்ள பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. 

சர்வதேச சமூகத்தை பெரும் அதிர்ச்சிக்கும், துயரத்துக்கும் ஆளாக்கியுள்ள இந்த சம்பவத்தில், விமானத்தில் வந்த 298 பேரும் உடல் கருகி பலியாயினர். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் பயணிகளிடம் இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. அதனை உறுதி செய்யும் வகையில் அங்கியிருந்து தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன. இதற்கிடையே விபத்தில் பலியான பயணிகளின் கிரிடிட் கார்டுகள் உக்ரைனில் பயன்படுத்தப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
எம்.எச்.17 சுட்டு வீழ்த்தப்பட்ட இடத்தில் திருடிய பொருட்களுடன் அழகு படுத்தி போட்டோ எடுத்த இளம்பெண் Reviewed by NEWMANNAR on July 27, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.