வட மாகாண நியதிச் சட்டங்கள்; ஆளுநரின் அங்கீகாரத்தினைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
வட மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட நியதிச் சட்டங்களுக்கான ஆளுநரின் அங்கீகாரத்தினைப் பெறுவதில் தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக குற்றஞ்சுமத்தப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையினால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நியதிச் சட்டங்களைப் போன்றே வட மாகாணத்திற்கான நியதிச் சட்டங்கள் வகுக்கப்பட்டிருந்ததாக வட மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட நியதிச் சட்டங்களுக்கான அங்கீகாரத்தை வழங்குவதில் அனைத்து தரப்பினரும் விரைந்து செயற்பட்டிருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டுகின்றார்.
நிதி நியதிச் சட்டம், முத்திரை வரி கைமாற்றுச் சட்டம், முதலமைச்சருக்கான நிதி சட்டம் ஆகிய மூன்று நியதிச் சட்டங்கள் ஆளுநரின் அங்கீகாரத்திற்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
நியதிச் சட்டங்கள் தொடர்பில் சட்ட மாஅதிபர் திணைக்களத்தின் ஆலோசனைகள் கிடைத்துள்ளதாகவும் தனது நிலைப்பாட்டினை இன்னும் சில தினங்களில் அறிவிப்பதாகவும் வடமாகாண ஆளுநர் அண்மையில் தொலைநகல் மூலம் வடமாகாண சபைக்கு அறிவிருந்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
வட மாகாண நியதிச் சட்டங்கள்; ஆளுநரின் அங்கீகாரத்தினைப் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு
Reviewed by NEWMANNAR
on
July 18, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
July 18, 2014
Rating:


No comments:
Post a Comment