அண்மைய செய்திகள்

recent
-

எதிர்வரும் 36 மணிநேரத்திற்கு கடும்காற்றுடன் கூடிய மழை

வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை காரணமாக எதிர்வரும் 36 மணிநேரத்திற்கு கடும்காற்று மழைப்பாங்கான காலநிலை தொடரவுள்ளதால் பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்திருப்பதாவது, கடந்த இருபத்து நான்கு மணிநேரத்தில் நீர்கொழும்பு பிரதேசத்தில் அதிகூடுதலாக 137மில்லிமிற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. 

அத்துடன் மத்திய சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். அத்துடன் நாட்டின் ஏனை பிரதேசங்களில் பிற்பகல் அல்லது மாலையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. புத்தளம், கொழும்பு, அம்பாந்தோட்டைக்கு அப்பாற்பட்ட கடற்பிரதேசங்கயில் இடைக்கிடையியே இடியுடன் கூடிய மழைபெய்யும்.

 நாட்டைச் சூழவுள்ள ஏனை கடற்பிரதேசங்களிலும் மழையுடன் கூடிய காலநிலையே நீடிக்கும். காற்று தென்மேற்கு திசையில் வீசவுள்ளதோடு அதன் வேகம் மணிக்கு 20முதல் 40கிலோமீற்றர் வரை காணப்படும். கட்டுநாயக்கா தொடக்கம் கொழும்பு காலி ஊடாக அம்பாந்தோட்டை வரை காற்றின் வேகம் மணிக்கு 70கிலோமீற்றர் வரை உயர்வடையலாம். ஆகவே ஆழ்கடல் மற்றும் சிறுகடல் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவர்ப்பதுடன் பொதுமக்கள் இடியுடன் கூடிய மழையின் போதும் கடும் காற்றின் போதும் அவதானமாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர். மேலும் இந்நிலைமையானது எதிர்வரும் 36 மணித்தியாலத்திற்கு நீடிக்கலாம் எனக் கருதப்படுகின்றது.
எதிர்வரும் 36 மணிநேரத்திற்கு கடும்காற்றுடன் கூடிய மழை Reviewed by NEWMANNAR on August 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.