சிறுவர்களை சித்திரவதை செய்த பதில் நீதவானை கைது செய்ய நடவடிக்கை
றுவர்களை சித்திரவதை செய்த பதில் நீதவான் ஒருவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிறுவர் பராமரிப்பு நிலையமொன்றை நடத்தி வரும் பதில் நீதவான் ஒருவரே இவ்வாறு சிறுவர்களை சித்திரவதை செய்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தென் மாகாணத்தில் இயங்கி வரும் நீதிமன்றமென்றின் பதில் நீதவான் ஒருவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பதில் நீதவானின் மனைவி அரசாங்கத்தின் முக்கிய பதவியொன்றை வகித்து வருகின்றார்.
அரசியல் தொடர்பு காணப்படுவதனால் கணவர் கைது செய்யப்படுவதனை தடுக்க பல்வேறு வழிகளில் குறித்த பெண் அதிகாரி அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றார்.
சிறுவர் பராமரிப்பு நிலையத்தின் காவலாளி ஒருவர் சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டமை குறித்த தகவல்களையும் நீதவான் மூடி மறைத்துள்ளார்.
இது தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சிறுவர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்ட காவலாளியை கைது செய்த போதிலும், நீதவான் பொலிஸாருக்கு அழுத்தங்களை பிரயோகித்துள்ளார்.
சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் உள்ள சிறுவர்களை நீதவான் தாக்கி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் தொடர்ச்சியாக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சிரேஸ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
சிறுவர்களை சித்திரவதை செய்த பதில் நீதவானை கைது செய்ய நடவடிக்கை
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:

No comments:
Post a Comment