மன்னாரில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இராணுவ சிப்பாயை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
மன்னார் பனங்கட்டிக்கோட்டு மேற்கு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இராணுவ சிப்பாயை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை(05-09-2014) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் இன்று வெள்ளிக்கிழமை(22) உத்தரவிட்டுள்ளார்.
மன்னார் பனங்கட்டிக்கோட்டு மேற்கு கிராமத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமியுடன் சௌத்பார் இராணுவ முகாமைச் சேர்ந்த இராணுவ சிப்பாய் ஒருவர் காதல் தொடர்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அண்மையில் குறித்த சிறுமியை குறித்த இராணுவ சிப்பாய் சௌத்பார் இராணுவ முகாமிற்கு முன்னால் உள்ள பற்றைக்காட்டினுள் கூட்டிச் சென்று பாலியல் துஸ்பிரையோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவத்தை அப்பகுதியைச் சேர்ந்த இருவர் நேரடியாக கண்டுள்ளனர்.
குறித்த சிறுமி வவுனியாவிற்கு சென்ற நிலையில் வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த சிறுமி தனக்கு நடந்தவற்றை வைத்தியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த சிறுமியின் பிரச்சினை தொடர்பாக வவுனியா வைத்தியசாலைத்தரப்பினர் மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கினர்.
இந்த நிலையில் குறித்த சிறுமியின் தாய் மன்னார் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.
மன்னார் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் தடுப்பு பிரிவு அதிகாரிகள் குறித்த சிறுமியிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டனர்.
இதன் போது சௌத்பார் இராணுவ முகாமைச் சேர்ந்த 'சம்பத்' எனும் இராணுவ சிப்பாயிலே காரணம் என தெரிவித்ததோடு குறித்த சிப்பாயி இராணுவ பௌசர் வாகனத்தின் சாரதியாக கடமையாற்றவதாக கூறியதோடு தொலைபேசியில் உரையாடுவதாகவும் கூறி குறித்த தொலைபேசி இலக்கத்தையும் பொலிஸாரிடம் வழங்கியுள்ளனர்.
இந்த நிலையில் மன்னார் பொலிஸார் சௌத்பார் இராணுவ முகாமிற்கு விசாரனைக்காக சென்ற போது குறித்த பெயருடைய இராணுவ சிப்பாயி தமது முகாமில் இல்லை என கூறி விசாரனைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த நிலையில் குறித்த தொலைபேசி இலக்கத்தின் விபரத்தை பெற்றுக்கொண்ட போது அது ஒரு பெண்னுடையது எனவும் அவரது கணவர் சௌத்பார் இராணுவ முகாமில் கடமையாற்று இராணுவச் சிப்பாய் எனவும் தெரிய வந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த இராணுவ சிப்பாயை கைது செய்த மன்னார் பொலிஸார் இன்று வெள்ளிக்கிழமை(22) மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் ஆனந்தி கனகரட்ணம் முன்னிலையில் ஆஜர் படுத்தினர்.
இதன் போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த இராணுவச்சிப்பாயை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை (05-09-2014) விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதோடு எதிர் வரும் 5 ஆம் திகதி அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டதோடு குறித்த சிறுமியை அன்னை இல்லத்தில் ஒப்படைக்க நீதவான் உத்தரவிட்டார்.
குறித்த சிறுமி சார்பாக சட்டத்தரணிகளான பிரிமூஸ் சிறாய்வா மற்றும் ரி.வினோதன் ஆகியோர் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இராணுவ சிப்பாயை விளக்கமறியலில் வைக்க உத்தரவு.
Reviewed by NEWMANNAR
on
August 22, 2014
Rating:

No comments:
Post a Comment