மேற்கு ஆபிரிக்காவில் உள்ள இலங்கையர்களை உடனடியாக நாடு திரும்புமாறு அழைப்பு
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் வசிக்கும் இலங்கையர்களை உடனடியாக நாடு திரும்புமாறு இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேற்கு ஆபிரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுக்கு அவர்களது உறவினர்கள் அறிவிக்க வேண்டும் என பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.
எபோலோ தொற்று நோய் தாக்கம் மேற்கு ஆபிரிக்க நாடுகளில் தீவிரமாக பரவி வருவதால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. லிபியா- சியாரா லியோன் மற்றும் கினியா போன்ற மேற்கு ஆபிரிக்க நாடுகளில் சுமார் 200 இலங்கையர்கள் பணிபுரிவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே எபோலோ தொற்று நோய் ஆட்கொல்லி நோயாக உருவெடுத்துள்ளதால் அங்குள்ள இலங்கையர்கள் நாடு திரும்புவது சிறந்ததென இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரந்தெனிய தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆபிரிக்காவில் உள்ள இலங்கையர்களை உடனடியாக நாடு திரும்புமாறு அழைப்பு
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:

No comments:
Post a Comment