மடு அன்னையின் ஆவணித்திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி.
மடு அன்னையின் ஆவணித் திருவிழா எதிர்வரும் வெள்ளிக்கிழமை 15 ஆம் திகதி சிறப்பாக கொண்டாடுவதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக மடுத்திருத்தலத்தின் பரிபாலகர் அருட்தந்தை எமிலியான்ஸ் பிள்ளை தெரிவித்தார்.
மடு அன்னையில் ஆவணித்திருவிழா கடந்த 6 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.அதனைத்தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு வருகின்றது.எதிர்வரும் 15 ஆம் திகதி வெள்ளிக்கிழமை திருவிழா திருப்பலி மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் தலைமையில் கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்படும்.
பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு குடி நீர்,சுகாதாரம், ஆகியவை தொடர்பாக விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
திருவிழாக்காலத்தில் இடம் பெறும் சட்ட விரோத நடவடிக்கைகளை தடுக்க மடுவில் விசேட பொலிஸ் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளதோடு 750 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதே வேளை பக்தர்களின் நலனை கருத்தில் கொண்டு சுற்றுலா நீதிமன்றம் ஒன்று மடுவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.குறித்த நீதிமன்றம் 12 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை செயற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. \மடு அன்னையின் திருவிழாவிற்கு நாட்டின் சகல பாகங்களில் இருந்தும் சுமார் 5 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மடு அன்னையின் ஆவணித்திருவிழாவிற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி.
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:
Reviewed by NEWMANNAR
on
August 13, 2014
Rating:


No comments:
Post a Comment