அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தல் தொடர்பான வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு

தலைமன்னாரில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்த முற்பட்ட போது கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் குறித்த  வழக்கினை இம்மாதம் 28ம் திகதிக்கு மன்னார் மாவட்ட நீதவான் ஆனந்தி கனகரெட்ணம் நேற்று (21) வியாழக்கிழமை ஒத்திவைத்துள்ளார்.

தலைமன்னாரிலிருந்து தமிழகத்திற்கு சுமார் 6 போடி ரூபாய் மதிப்புள்ள தங்கக்கட்டிகளை கடத்த முற்பட்டதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களையும் நேற்று(21) வியாழக்கிழமை மன்னார் மாவட்ட நீதிமன்றில் தலைமன்னார் பொலிஸார் ஆஜர் படுத்தியபோது கைப்பற்றப்பட்ட தங்கக்கட்டிகளையும் மன்னார் நீதிமன்றில் தலைமன்னார் பொலிஸார் ஒப்படைத்தனர்.

தமிழகத்திற்கு கடத்தப்படவிருந்த ஆறு கோடிரூபாய் பெறுமதியான 11கிலோ 828கிராம் நிறையுடைய தங்கக்கட்டிகளை தலைமன்னார் பொலிஸார் கடந்த திங்கள் கைப்பற்றியதுடன் சந்தேக நபர்கள் மூவரையும் கைது செய்திருந்தனர்.

இவர்களிடம் விசாரணைகளை மேற்கொண்ட தலைமன்னார் பொலிஸார் குறித்த மூவரையும் நேற்று(21) வியாழக்கிழமை மன்னார்  நீதிமன்றத்தில் நீதவான் ஆனந்தி கனகரெட்ணம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.

இதன் போது சந்தேகநபர்கள் சார்பாக கொழும்பிலிருந்து வருகைதந்த ஜே.ஜி.ஜோன் தலைமையில் ஜந்து சட்டத்தரணிகள் முன் நிலையாகியிருந்தனர்.

இதன்போது சந்தேக நபர்கள் சார்பாக நீதிமன்றில் முன்நிலையாகியிருந்த சட்டத்தரணிகள் இந்த நாட்டில் ஒருவர் கணிசமாக தங்கங்களே வைத்திருக்கமுடியும் என கூறப்படவில்லை .

ஆகவே அவர்கள் தங்களது தேவைக்காகவே தங்கம் வைத்திருந்துள்ளார்கள் எனவே அவர்களை விடுதலை செய்யவேண்டும் என கோரியிருந்தானர்.


இந்நிலையில் நீதிமன்றம் குறித்த வழக்கினை மன்னார் மாவட்ட நீதிமன்றில் எடுத்துக்கொள்ளவதற்கு நீதி நியாயாதிக்கம் உள்ளதா என சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும் என தெரிவித்து வழக்கினை இம்மாதம் மாதம் 28ம் திகதிக்கு மன்னார் நீதவான் ஆனந்தி கனகரெட்ணம் குறித்த வழக்கினை ஒத்திவைத்தார்.

இதேவேளை குறித்த தங்கக்கட்டிகளை பாதுகாப்பாக வைப்பதற்கு நீதிமன்ற உத்தவிற்கமைவாக பலத்த பாதுகாப்புடன் வங்கி ஒன்றிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தல் தொடர்பான வழக்கு ஓகஸ்ட் 28ம் திகதிக்கு ஒத்திவைப்பு Reviewed by NEWMANNAR on August 22, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.