அண்மைய செய்திகள்

recent
-

ஆறு வயது தங்கையை கத்தியால் குத்திக் கொலை செய்த அக்கா-Photo

படல்கும்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலுபொத்த - பங்களாவத்த பகுதியில் ஆறு வயது தங்கையை கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படும் 13 வயதுடைய சிறுமி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரால் தாக்குதலுக்கு இலக்கான ஷாதிலா பானு எனப்படும் அவரது தங்கை படல்கும்புர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் 20.08.2014 அன்று மாலை இடம்பெற்றுள்ளது.

மொனராகலை – படல்கும்புர அலுபொத்த - பங்களாவத்த பிரதேச வீடொன்றிலுள்ள அக்கா – தங்கை இருவருக்குள்ளும் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்குக் காரணம் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை தாக்குதலுக்கு இலக்கான சிறுமி மரத்தில் இருந்து விழுந்ததாக கூறியே வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது.

வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் சந்தேகநபரான 13 வயது சிறுமி கைதுசெய்யபட்டு பொலிஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட போது, “சம்பவம் இடம்பெற்ற வேளை தனக்கு என்ன நடந்தது என்றே தெரியாது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சந்தேக நபரான அக்காவை 22.08.2014 அன்று மொனராகலை நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தியதாக படல்கும்புர பொலிஸார் தெரிவித்தனா்.

இச்சம்பவம் தொடா்பான மேலதிக விசாரணைகளை படல்கும்புர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனா்.




ஆறு வயது தங்கையை கத்தியால் குத்திக் கொலை செய்த அக்கா-Photo Reviewed by NEWMANNAR on August 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.