அண்மைய செய்திகள்

recent
-

யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! மேலும் இருவர் கவலைக்கிடம்

மழை பெய்து கொண்டு இருந்தவேளையில் மின்சாரம் திருத்தும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள் மூவரை மின்சாரம் தாக்கியதில் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட மற்றும் இருவர் ஆபத்தான நிலையில் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார்கள்.
இன்று இரவு 7.00 மணியளவில் இந்த சம்பவம் இளவாலை சித்திரமேளி சந்தியில் இடம் பெற்றுள்ளது.

இலங்கை மின்சார சபையில் ஒப்பந்த அடிப்படையில் கடமையாற்றும் மட்டுவில் வளர்மதி சனசமுக நிலையத்தடியைச் சேர்ந்த வைத்திலிங்கம் காசிநாத் வயது 26 என்பவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்ட நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் சடலம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மற்றும் ஆபத்தான நிலையில் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மட்டுவில் வளர்மதி சனசமூக நிலையத்தடியைச் சேர்ந்த கந்தசாமி சசிகுமார் (வயது 26) இராசஜெயம் விஜயமோகன் (வயது 27) ஆகிய இருவரின் நிலையும் கவலைக்கிடமான முறையில் காணப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள்.

குறிப்பிட்ட சம்பவம் சம்பந்தமாக இளவாலைப் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்கள்.

யாழில் மின்சாரம் தாக்கி ஒருவர் பலி! மேலும் இருவர் கவலைக்கிடம் Reviewed by NEWMANNAR on August 23, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.