162 பேருடன் காணாமல் போன ஏர்ஏசியா விமானம் கடலுக்கடியில்? இந்தோனேசிய மீட்புப் படை அதிகாரிகள் தகவல்
இந்தோனேஷியாவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானம் நடுவானில் மாயமாகியுள்ளது. அதில் பயணித்த 162 பேரின் கதி என்ன என்று இதுவரை உத்தியோகபூர்வமாக தெரியவில்லை.
காணாமல் போன விமானம் கடலுக்கடியில் மூழ்கியுள்ளதாக தாம் நம்புவதாக இந்தோனேசியாவின் தேசிய மீட்ப்புப்படை தலைமை அதிகாரியான Marsdya Tni Hendry Bambang சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவின் சுராபாயா நகரில் இருந்து QZ8501 என்ற எண்ணுள்ள ஏர்ஏசியா விமானம் 162 பேருடன் காலை 6.42 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 149 இந்தோனேஷியர்கள், 3 கொரியர்கள், சிங்கப்பூர், பிரிட்டன் , மலேசியன் ஆகிய நாட்டவர் தலா 1, விமான ஊழியர்கள் 7 பேர் இருந்துள்ளனர்.
இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சற்று நேரத்தில் மாற்று பாதையில் பயணித்துள்ளது. அதைத் தொடர்ந்து, காலை 7.24 மணிளவில் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில் இருந்து விலகி இருக்கிறது.
இதையடுத்து, மாயமான ஏர் ஏசியா விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தேடுதல் வேட்டையில் அதிநவீன சி.2 130 ரக விமானங்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே அந்த விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளனர். இருப்பினும் உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், இந்தியா தரப்பிலிருந்து மாயமான விமானத்தை தேடும் பணிக்காக 3 இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் லாங் ரேஞ்ச் நேவல் ஏர்கிராப்ட் கடற்படை விமானம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மலேசியாவும் விமானத்தை தேடும் பணிக்காக அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என அறிவித்துள்ளார்.
இந்த விமானம், காலை 8.30 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைந்து இருக்க வேண்டும். அது, ஜாவா கடற்பகுதிக்கு மேல் சென்று கொண்டிருந்போது கட்டுப்பாட்டை இழந்தது. அதற்கு முன் மேக மூட்டத்தை தவிர்க்க விமானம் மிகஉயரத்தில் பறக்க வேண்டும் என விமாணி கேட்டுக் கொண்டார் என இந்தோனேஷியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விமானத்தில் பயணித்த 162 பேரின் கதி என்ன என்பதும் இதுவரை தெரியவில்லை. அதில் பயணம் செய்தவர்களின் உறவினர்கள் கடும் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர். விமான நிலையத்தில் தங்களது உறவினர்களுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் பதட்டத்துடன் அழுத வண்ணம் உள்ளனர். அவர்கள் ஏர்ஏசியாவின் செய்தி அறிக்கைக்காக காத்திருக்கிறார்கள்.
இதேபோல், கடந்த மார்ச் மாதம் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற எம்.எச்-370 என்ற விமானமும் மாயமானது. அந்த விமானமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
காணாமல் போன விமானம் கடலுக்கடியில் மூழ்கியுள்ளதாக தாம் நம்புவதாக இந்தோனேசியாவின் தேசிய மீட்ப்புப்படை தலைமை அதிகாரியான Marsdya Tni Hendry Bambang சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
இந்தோனேஷியாவின் சுராபாயா நகரில் இருந்து QZ8501 என்ற எண்ணுள்ள ஏர்ஏசியா விமானம் 162 பேருடன் காலை 6.42 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 149 இந்தோனேஷியர்கள், 3 கொரியர்கள், சிங்கப்பூர், பிரிட்டன் , மலேசியன் ஆகிய நாட்டவர் தலா 1, விமான ஊழியர்கள் 7 பேர் இருந்துள்ளனர்.
இந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சற்று நேரத்தில் மாற்று பாதையில் பயணித்துள்ளது. அதைத் தொடர்ந்து, காலை 7.24 மணிளவில் விமான கட்டுப்பாட்டு அறையின் தொடர்பில் இருந்து விலகி இருக்கிறது.
இதையடுத்து, மாயமான ஏர் ஏசியா விமானத்தை தேடும் பணியில் அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். தேடுதல் வேட்டையில் அதிநவீன சி.2 130 ரக விமானங்கள் தீவிரமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையே அந்த விமானம் ஜாவா கடலில் விழுந்து நொறுங்கி விட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளனர். இருப்பினும் உறுதியான தகவல் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
மேலும், இந்தியா தரப்பிலிருந்து மாயமான விமானத்தை தேடும் பணிக்காக 3 இந்திய கடற்படை கப்பல்கள் மற்றும் லாங் ரேஞ்ச் நேவல் ஏர்கிராப்ட் கடற்படை விமானம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மலேசியாவும் விமானத்தை தேடும் பணிக்காக அனைத்து உதவிகளையும் செய்ய தயார் என அறிவித்துள்ளார்.
இந்த விமானம், காலை 8.30 மணிக்கு சிங்கப்பூர் சென்றடைந்து இருக்க வேண்டும். அது, ஜாவா கடற்பகுதிக்கு மேல் சென்று கொண்டிருந்போது கட்டுப்பாட்டை இழந்தது. அதற்கு முன் மேக மூட்டத்தை தவிர்க்க விமானம் மிகஉயரத்தில் பறக்க வேண்டும் என விமாணி கேட்டுக் கொண்டார் என இந்தோனேஷியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேபோல், கடந்த மார்ச் மாதம் மலேசியாவிலிருந்து சிங்கப்பூர் சென்ற எம்.எச்-370 என்ற விமானமும் மாயமானது. அந்த விமானமும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
162 பேருடன் காணாமல் போன ஏர்ஏசியா விமானம் கடலுக்கடியில்? இந்தோனேசிய மீட்புப் படை அதிகாரிகள் தகவல்
Reviewed by NEWMANNAR
on
December 29, 2014
Rating:

No comments:
Post a Comment