அண்மைய செய்திகள்

recent
-

மன்­னாரில் வழங்­கப்­பட்ட இந்­திய வீட்டுத் திட்­டத்தில் குறை­பா­டுகள் இருப்பின் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­ம்; சு. தட்­ச­ணா­மூர்த்தி

மன்­னாரில் வழங்­கப்­பட்ட இந்­திய வீட்டுத் திட்­டத்தில் குறை­பா­டுகள் இருப்பின் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­ம்; சு. தட்­ச­ணா­மூர்த்தி
மன்­னாரில் வழங்­கப்­பட்ட இந்­திய வீட்டுத் திட்­டத்தில் காணப்­படும் குறை­பா­டுகள் தொடர்பில் எமது கவ­னத்­திற்கு கொண்­டு­வ­ரப்­படும் பட்­சத்தில் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென தெரி­வித்த யாழ். இந்­திய பிரதி துணைத் தூதுவர் சு. தட்­ச­ணா­மூர்த்தி எதிர்­வ­ரும் ­ஜ­ன­வரி மாத இறு­திக்குள் மடு­வி­லி­ருந்து திருக்­கே­தீஸ்­வரம் வரை­யி­லான ரயில் சேவை விஸ்­த­ரிக்­கப்­படு­மெ­னவும் குறிப்­பிட்டார்.
மன்­னாரில் யாழ். இந்­தியத் துணைத் தூத­ர­கமும் திரு­மறைக் கலா­மன்­றமும் இணைந்து நடத்­திய தீம்­த­னனா பரத நடன நிகழ்­வுக்கு தலைமை தாங்கி உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.
அவர் மேலும் தெரி­விக்­கையில்,
கடந்த மூன்று வரு­டங்­க­ளாக இது போன்ற கலை நிகழ்­வு­களை நாங்கள் எல்லா மாவட்­டங்­களில் நடத்­திய போதும் மன்னார் மாவட்­டத்தை மறந்­தி­ருந்தோம். இதற்கு முதலில் மன்னார் மக்­க­ளிடம் மன்­னிப்பு கோரிக்­கொண்டு இப்­பொ­ழுது உங்­களை நினைவு கூர்ந்­த­வர்­க­ளாக இக் கலை விழாவை இங்கு நடத்­து­கின்றோம்.
இவ் விழாவை மன்­னாரில் நடத்த வேண்டும் என எண்­ணிய போது திரு­மறைக் கலா­மன்றம் எங்­க­ளுடன் கைகோர்த்­தது. கடந்த மாதம் இது போன்ற கலை நிகழ்வு வவு­னி­யாவில் இடம்­பெற்­றது. அந்த நிகழ்வில் கலை பயிலும் மாண­வர்­க­ளையும் ஆசி­ரி­யர்­க­ளையும் கௌர­விக்­கு­மு­க­மாக அவர்­க­ளுக்கு ஒரு தளம் அமைத்துக் கொடுத்து அழ­கான விழாவை ஏற்­பாடு செய்­தி­ருந்தோம்.
அதேபோல் இங்கும் நடனக் கலை பயிலும் மாண­வர்கள், ஆசி­ரி­யர்­க­ளையும் கௌர­வித்து அவர்­க­ளுக்கும் ஒரு களத்தை ஏற்­பாடு செய்து கொடுத்­துள்ளோம். முக்­கி­ய­மாக இந்­திய தூத­ரகம் தன்­னா­லான சேவையை செய்ய வேண்டும் என்ற நோக்கில் இவ்­வா­றான கலை நிகழ்­வு­களை எல்லா இடங்­க­ளிலும் மேற்­கொண்டு வரு­கின்றது.
அத்­துடன் யாழ்ப்­பா­ணத்தில் நல்லூர் கோவில் திரு­வி­ழாவின் போது இந்­திய கலை­ஞர்­களை இங்கு வர­வ­ழைத்து இங்­குள்ள கலை­ஞர்­க­ளுக்கு பயிற்சி பட்­டறை நடத்­து­கின்றோம். அவ்­வாறு மன்­னா­ரிலும் கலை ஆர்வம் கொண்­ட­வர்­க­ளுக்கும் இவ்­வா­றான பயிற்சி பட்­டறை நடத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வுள்ளோம்.
கடந்த மூன்று வரு­டங்­க­ளாக இந்­திய தூத­ரகம் வட மாகா­ணத்தில் முக்­கிய வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றது. முக்­கி­ய­மாக ஐம்­ப­தா­யிரம் இந்­திய வீட்டுத் திட்டம் வட மாகா­ணத்­திலும் கிழக்கு மாகா­ணத்­திலும் மலை­ய­கத்­திலும் நிர்­மா­ணித்துக் கொடுப்­ப­தற்­கான ஏற்­பா­டுகள் நடை­பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றன.இப்­பொ­ழுது 30ஆயிரம் வீடு­களின் நிர்­மாணப் பணிகள் பூர்த்­தி­ய­டைந்­துள்­ளன.
மன்னார் மாவட்­டத்­திற்கு 6 ஆயிரம் வீடுகள் வழங்­கப்­பட்­டுள்­ளன. இதில் 3 ஆயி­ரத்து எழு­நூறு வீடுகள் கட்டி முடிக்­கப்­பட்­டுள்­ளன.
அதே­வே­ளையில் வீட்­டுத்­திட்டம் சம்­பந்­த­மாக எங்­க­ளுக்கு முறைப்­பா­டுகள் வந்­தி­ருக்­கின்­றன. இவற்றை நிவர்த்தி செய்வ­தற்கு நாங்கள் எல்­லா­வி­த­மான நட­வ­டிக்­கை­களையும் மேற்­கொண்டு வரு­கின் றோம். எதிர்­கா­லத்தில் இவ்­வா­றான குறை­பா­டுகள் ஏற்­ப­டா­தி­ருக்க இந்­திய தூத­ரகம் நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கின்­றது.
மேலும் இந்த மாதம் அல்­லது அடுத்த மாதத்­துக்குள் மடு­வி­லி­ருந்து திருக்­கே­தீஸ்­வரம் வரை ரயில் சேவை விஸ்­த­ரிக்­கப்­பட்­டு­விடும். இதைத் தொடர்ந்து விரைவில் இச் சேவை தலைமன்னார் பியர் வரைக்கும் நீடிப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களும் மேற்­கொள்ளப்படு­கின்­றது. இச் சேவை ஆரம்­பிக்­கப்­பட்டால் மன்னார் மாவட்டத்துக்கு பெரும் நன்மைக்கு வழி பிறக்கும். இதனால் பொருளாதாரமும் பெருக வாய்ப்பு ஏற்படும் என்றார்.

 யாழ் இந்திய துணைத்தூதரகமும் திருமறைக்கலாமன்றமும்  இணைந்து நடாத்திய தீம்தனனா-3 Photos


மன்­னாரில் வழங்­கப்­பட்ட இந்­திய வீட்டுத் திட்­டத்தில் குறை­பா­டுகள் இருப்பின் நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­ம்; சு. தட்­ச­ணா­மூர்த்தி Reviewed by NEWMANNAR on December 29, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.