பழைய விலையில் கேஸ் விற்றால் முறையிடவும்
நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு சமையல், எரிவாயு சிலிண்டரை விற்பனை செய்யாது பழைய விலைக்கு விற்பனை செய்பவர்கள் தொடர்பில் 077-3232432 என்ற கையடக்கத் தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு அறியத்தருமாறு நுவரெலியா, மாவட்ட செயலாளர் டீ.பீ.ஜி.குமாரசிரி கோரியுள்ளார்.
இவ்வாறு முறைப்பாடு செய்யும்பட்சத்தில், அது தொடர்பில் நுவரெலியா மாவட்ட விலை கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு அறிவித்து சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
சமையல் எரிவாயு சிலிண்டரின் (12.5 கிலோகிராம்) விலை நேற்று முன்தினம் நள்ளிரவுடன் 250 ரூபாவால் குறைக்கப்பட்டிருந்தபோதும் மலையக பகுதிகளில் உள்ள சில எரிவாயு சிலிண்டர் விற்பனையாளர்கள் பழைய விலையான 2236 ரூபாய்க்கு விற்பனை செய்துவருவதாக வாடிக்கையாளர்கள் குற்றஞ்சுமத்துகின்றனர்.
இவ்விடயம் தொடர்பில் தொடர்புகொண்டு கேட்டபோதே அவர் இதனை தெரிவித்தார்.
'எரிவாயு சிலிண்டரின்; விலை 250ஆல் குறைக்கப்பட்டதால் அதனை விலை 1986 ரூபாவுக்கே விற்பனை செய்ய வேண்டும். சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கும் போது உடனடியாக விலையை அதிகரித்து விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் குறைக்கும் போதும் விலையை குறைத்து விற்பனை செய்ய வேண்டும்' எனவும் அவர் வலியுறுத்தினார்.
பழைய விலையில் கேஸ் விற்றால் முறையிடவும்
Reviewed by NEWMANNAR
on
December 08, 2014
Rating:
.jpg)
No comments:
Post a Comment