அண்மைய செய்திகள்

recent
-

பொது நலத்துடன் சிந்திக்கின்ற தன்மை எமது மக்களுக்கு இருக்க வேண்டும்-மன்னார் நகர சபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம்.

மன்னாhர் நகர சபை பெறுப்பேற்கப்பட்டு 3 வருடங்களும் 8 மாதங்களையும் கடக்கின்ற நிலையில் நகர சபையின் பணியாளர்கள் உறுப்பினர்கள் எவ்வித பிரச்சினைகளும் இன்றி இணைந்து சேவையாற்றி வருகின்றனர்.

இச்சபையில் மேற்கொள்ளப்படும் அனைத்து தீர்மானங்களும் ஏக மனதாக நிறைவேற்றப்படுகின்றது.

இந்த நிலையில் சபை உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக்கொள்ளுவதாக மன்னார் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.

-மன்னார் நகர சபையின் இவ்வருடத்திற்கான இறுதிக்கூட்டம் நகர சபையின் தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தலைமையில் இன்று(15)இடம் பெற்றது.

இதன் போது தலைமை உரையாற்றிய போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

-அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,,,

-மன்னார் நகர சபையில் கருத்து வேறுபாடுகள் பல காணப்படுகின்ற போதும் சபையில் முன் வைக்கப்படுகின்ற தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

-நாங்கள் பல சேவைகளை இந்த மக்களுக்கு செய்துள்ளோம்.அரசாங்கத்தினால் எமக்கு கிடைக்கின்ற உதவிகள் போதாது.அமைச்சினாலும் கிடைக்கின்ற உதவிகள் கூட பெரிதாக கிடைப்பதில்லை.இருந்தாலும் மக்களின் வறிப்பணத்தைக் கொண்டு சிறப்பாக இந்த வேலையை முன்னெடுத்து வருகின்றோம்.

-இது வரை மன்னார் நகர சபைக்குற்பட்ட பகுதிகளில் மன்னார் நகர சபையினால் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்களை பட்டியலிட்டு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டியுள்ளது.நாங்கள் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டங்கள் தொடர்பில் மக்களுக்கு அவை உரிய முறையில் சென்றடையவில்லை.

-எவற்றை செய்தாலும் மக்கள் போதாது என்ற நிலையில் இருந்து மாறமாட்டார்கள்.பொது நலத்துடன் சிந்திக்கின்ற தன்மை எமது மக்களுக்கு இருக்க வேண்டும்.அவர்கள் மன்னார் நகர சபையுடன் இணைந்து செயல்பட்டு எமக்காக கதைக்க வேண்டும்.சிலருடைய கருத்துக்கள் எமக்கு எதிரானதாக உள்ளது.இருந்தாலும் நகர சபையின் உறுப்பினர்கள் எவறும் சுய நோக்குடன் செயற்பட்டது இல்லை. மக்களுக்காக எவ்வளவு தியாகங்களை அவர்கள் செய்துள்ளனர்.நாங்கள் பல்வேறு கசப்பான வார்த்தைகளை கேட்டும் எமது மக்களுக்காக கோபங்களை அடக்கி சேவையாற்றி வருகின்றோம் இந்த நகரின் அபிவிருத்திக்காக என மன்னார் நகர சபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம் தெரிவித்தார்.

-குறித்த கூட்டத்தில் நகர சபையின் செயலாளர் எக்.எல்.றொனால்ட்,உப தலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ்,நகர சபை உறப்பினர்களான இ.குமரேஸ்.சி.மெரினஸ் பெரேரா,எஸ்.பிரிந்தாவனநாதன்,எஸ்.செல்வக்குமார் டிலான்,என்.நகுசீன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் நிருபர்)

Video



(15-12-2014)
பொது நலத்துடன் சிந்திக்கின்ற தன்மை எமது மக்களுக்கு இருக்க வேண்டும்-மன்னார் நகர சபை தலைவர் எஸ்.ஞானப்பிரகாசம். Reviewed by NEWMANNAR on December 15, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.