வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 8 பேர் மருத்துவ துறைக்கு தெரிவு
வவுனியா, தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் இருந்து 8 பேர் மருத்துவத்துறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக பாடசாலை அதிபர் எம்.எஸ்.பத்மநாதன் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
3 பாடங்களில் ஏ சித்தியை பெற்று மாவட்டத்தில் முதலாமிடத்தினையும் தேசிய ரீதியில் 19 ஆம் இடத்தினையும் பெற்று அதி சிறப்பு சித்தியை எஸ்.மேகலாகரனும், அதி சிறப்பு சித்தியினையும் 3 பாடங்களில் ஏ சித்தியையும் மாவட்டத்தில் இரண்டாம் இடத்தினையும் தேசிய ரீதியில் 21 ஆம் இடத்தினையும் பெற்ற பி.வைஸ்ணவன் உட்பட 7 பேர் மருத்துவதுறைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இது தவிர, வர்த்தக துறையில் மாவட்ட ரீதியில் 3 ஆம் இடத்தினை வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவன் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் 8 பேர் மருத்துவ துறைக்கு தெரிவு
Reviewed by NEWMANNAR
on
December 29, 2014
Rating:

No comments:
Post a Comment