அண்மைய செய்திகள்

recent
-

மன்னாரில் வாழ்வாதாரத்தை இழந்த 114 குடும்பங்களுக்கு நல்லின கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு (Photos)

மன்னார் மாவட்டத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட, வாழ்வாதாரத்தை இழந்த மற்றும் பெண்களை தலைமைத்துவமாக கொண்டுள்ள குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தெரிவு செய்யப்பட்ட 114 குடும்பங்களுக்கு பல்லின கழப்பு கோழிக்குஞ்சுகளை வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறய்வா இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை வழங்கி வைத்தார்.

-வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் துரை அமைச்சர் பா.ஐங்கரநேசன் அவர்களிடம் வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறய்வா அவர்களினால் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு அமைவாகவே குறித்த கோழிக்குஞ்சுகள் வழங்கப்பட்டது.

மன்னார் உயிலங்குளம் விவசாய ஆராய்ச்சி பயிற்சசி நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) காலை 11 மணியளவில் கோழிக்குஞ்சுகள் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.

தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 20 கோழிக்குஞ்சுகள் வீதம் 114 பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த கோழிக்குஞ்சுகளை வடமாகாண சபை உறுப்பினர் எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, மன்னார் பிரதேச சபையின் உப தலைவர் அந்தோனி சகாயம், வடமாகாண சபை உறுப்பினர் எம்.ரயிஸ் அவர்களின் இணைப்பாளர் ஏ.எல்.முசாதீக் ஆகியோர் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் நிருபர்-

















மன்னாரில் வாழ்வாதாரத்தை இழந்த 114 குடும்பங்களுக்கு நல்லின கோழிக்குஞ்சுகள் வழங்கி வைப்பு (Photos) Reviewed by NEWMANNAR on December 29, 2014 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.