அண்மைய செய்திகள்

recent
-

இலங்கை வரும் இந்திய பிரதமர் காணாமல் போன,கடத்தப்பட்ட,அரசியல் கைதிகள் ஆகியோரின் விடுதலை குறித்து கவனம் செலுத்த வேண்டும். அன்ரனி ஜேசுதாஸ்.



இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயமானது இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்திற்கான பிரதி உபகாரமான விஜயாக அமையாது பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கைக்கான விஜயம் அமைய வேண்டும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் வட கிழக்கு மாகாண இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாஸ் தெரிவித்தார்.


வடமாகாண மீன்பிடி அமைச்சருக்கும்,வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் மன்னார் நகர மண்டபத்தில் இன்று(5) வியாழக்கிழமை காலை விசேட சந்திப்பு இடம் பெற்றது.இதன் போது கலந்து கொண்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,,,

இலங்கைக்கு வருகை தரும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி வடக்கிற்கு விஜயத்தை மேற்கொள்ளவுள்ள நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய வகையில் அமைய வேண்டும்.

யுத்தத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கள்,யுத்த குற்றங்கள் தொடர்பாக புதிய அரசாங்கத்திற்கு அதனை தேடிப்பார்க்கக்கூடிய வழி வகைகளை உருவாக்க வேண்டும் என்றும்,காணாமல் போனவர்கள் தொடர்பாக உள்ள விடையங்கள் தொடர்பாக ஆராய்ந்து நல்லதொரு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என இந்தியா வலியுருத்த வேண்டும்.

கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க காணமல் போனவர்கள் இறந்திருப்பார்கள் அல்லது அவர்கள் வெளிநாடுகளுக்கு சென்று விட்டார்கள் என்ற கருத்து ஒரு பாரதூரமான விடையமாக உள்ளது.ஆகவே காணாமல் போனவர்கள் தொடர்பாக பிரதமரின் கருத்திலும் இந்திய பிரதமர் கவனம் செலுத்த வேண்டும்.என தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் வட கிழக்கு மாகாண இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாஸ் மேலும் தெரிவித்தார்.
இலங்கை வரும் இந்திய பிரதமர் காணாமல் போன,கடத்தப்பட்ட,அரசியல் கைதிகள் ஆகியோரின் விடுதலை குறித்து கவனம் செலுத்த வேண்டும். அன்ரனி ஜேசுதாஸ். Reviewed by NEWMANNAR on March 05, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.