வடமாகாண மீன்பிடி அமைச்சருக்கும்,வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் மன்னாரில் விசேட சந்திப்பு.-Photos
வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் வடமாகாண கடற்றொழிலாளர்கள் இணையத்தின் பிரதி நிதிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை காலை(5) மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம் பெற்றது.
வடமாகாண கடற்தொழிலாளர் இணைத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் என்.எம்.ஆலம் தலைமையில் இடம் பெற்ற குறித்த சந்திப்பின் போது வடமாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன்,தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் வடகிழக்கு மாகாண இணைப்பாளர் அன்ரனி ஜேசுதாஸ், தேசிய மீனவ ஒத்துழைப்பு பேரவையின் மாவட்ட இணைப்பாளர் சோதிக்குரூஸ், வடமாகாண கடற்தொழிலாளர் இணைத்தின் யாழ் மாவட்ட செயலாளர் என்.வி.சுப்பிரமணியம், வடமாகாண கடற்தொழிலாளர் இணைத்தின் கிளிநொச்சி மாவட்ட செயலாளர் ஜோசப் பிரான்சிஸ் மற்றும் மன்னார் மாவட்டத்தில் உள்ள கடற்தொழில் அமைப்புக்களின் பிரதி நிதிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
இக்கலந்துரையாடலில் இந்திய இழுவைப் படகுகளின் அத்து மீறிய வடுகையை தடுப்பதற்கான வழி முறைகளை ஆராய்தல்,உள்ளுரில் எமது மீனவர்களால் முன்னெடுக்கப்படும் தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை நிறுத்துதல், அதற்கான மாற்றுதிட்டங்கள் தயாரித்தல், தென்னிலங்கை மீனவர்களின் மிதமிஞ்சிய வருகையை மட்டுப்படுத்துதல் வடமாகாண மீனவர்களின் வாழ்வாதரத்தை உயர்த்துவதற்கான வழி முறைகளை கண்டறிதல்,மீனவ கூட்டுறவுசங்கங்களின் அபிவிருத்தி தொடர்பாக ஆராய்தல் போன்ற பல்வேறு விடையங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.
வடமாகாண மீன்பிடி அமைச்சருக்கும்,வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையில் மன்னாரில் விசேட சந்திப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 05, 2015
Rating:
No comments:
Post a Comment