விலைக்கட்டுப்பாட்டுச் சபையோ அல்லது நுகர்வோர் அதிகார சபையோ மன்னார் மாவட்டத்தில் இல்லை . கட்டுபாடற்ற விதத்தில் விலைகள்
புதிய அரசாங்கத்தின் 100 நாள் திட்டத்தை நிறைவேற்றும் பொருட்டும், இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் படியும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கு அமைவாக சில விடயங்கள் நிறைவேறி வருகின்ற போதும் பல பலவிடயங்கள் பத்திரிகை செய்தியுடன் மட்டுமே நிற்கின்றன.
அரசாங்கத்தின் உயர் மட்ட த்தில் எடுக்கப்படும் தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய அமைச்சுக்கள், திணைக்களங்கள் சில விடயங்களில் கண்டும் காணாதது போல் இருக்கின்றமை மக்கள் புதிய அரசாங்கத்தின் மீது வைத்துள்ள நம்பிக்கையை இழக்க செய்கின்றது .
புதிய அரசாங்கத்தின் மிக முக்கியமான திட்டம் பொது மக்கள் மீது உள்ள சுமையை குறைக்க வேண்டும் என்பதே, ஆனால் இதை பயன்படுத்தி பலர் கொள்ளை லாபம் ஈட்டிக்கொள்வதை காணகூடியதாக உள்ளது.
வடபகுதியில் குறைக்கப்பட்ட விலைகள் நடைமுறைக்க வரவில்லை சமையல் வாயு,மீன்டின், மா, பால்மா, சீனி என்பன மிகமுக்கிய நுகர்ச்சிப்பொருட்களாகும், மன்னார் மாவட்டத்தை பொறுத்த மட்டில் இதில் எந்த மாற்றமும் தெரியவில்லை.
ஆனால் எரிபொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதேபோல்; பாணின் விலையும் ஒவ்வொரு இடங்களிலும் ஓவ்வொரு விலை விற்பதை காணக்கூடியதாக உள்ளது.உணகவங்களிலும் விலைகள் குறைக்கப்படாது விற்பனை செய்யப்படுகின்றமையினையும் காணக்கூடியதாக உள்ளது.
இதற்கு மிக முக்கிய காரணமாக அமைவது மன்னார் மாவட்டத்pல் விலைக் கட்டுப்பாட்டுச் சபையோ அல்லது நுகர்வோர் அதிகார சபையோ இல்லை.
இவர்கள் காலத்துக்கு காலம் வருகை தந்து ஓரிரு கடைகளை பரிசோதித்து அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தி தண்டம் அறவிட்டவுடன் தமது கடமை முடிந்து விட்டதாக உடனே திரும்பி போய் விடுகின்றனர் .
இதை விடுத்து மாவட்டத்தில் இருந்து உரிய முறையில் செயற்பட வேண்டும் என்பது மன்னார் மக்களின் பெரு விருப்பம் என்பதை சம்மந்தப்பட்ட திணைக்களத்துக்கு இதன்மூலம தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றோம்.
சபா மைக்கல் கொலின்
மன்னார்
விலைக்கட்டுப்பாட்டுச் சபையோ அல்லது நுகர்வோர் அதிகார சபையோ மன்னார் மாவட்டத்தில் இல்லை . கட்டுபாடற்ற விதத்தில் விலைகள்
Reviewed by NEWMANNAR
on
March 03, 2015
Rating:
.jpg)
No comments:
Post a Comment