மன்னார் நானாட்டான் மையப்பகுதியை சுத்தப்படுத்திய நானாட்டான் ம.வி பாடசாலை மாணவர்கள்.-Photos
மன்னார் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நானாட்டான் நகரின் மையப் பகுதி பல காலமாகவே துப்பரவு செய்யப்படாத நிலையில் காணப்பட்டது.
நானாட்டான் பிரதேச சபை இவ்விடையத்தில் எவ்வித அக்கறையும் காட்டாத நிலையில் செயற்பட்ட நிலையில் குறித்த மையப்பகுதியை நானாட்டான் ம.வி பாடசாலை மாணவர்கள் கடந்த சனிக்கிழமை(28) சிரமதானத்தின் மூலம் சுத்தப்படுத்தியுள்ளனர்.
நானாட்டான் ம.வி பாடசாலை மாணவர்கள், அதிபர்,ஆசிரியர்கள்,பாடசாலை அபிவிருத்தி சங்கம்,நானாட்டான் வர்த்தக சங்கம் ஆகியவை இணைந்து இந்த சிரமதானப்பணியை கடந்த சனிக்கிழமை(28) மேற்கொண்டுள்ளனர்.
நானாட்டான் பிரதேச சபையினால் துப்பரவு செய்ய முடியாத நிலையில் காணப்பட்ட நானாட்டான் மையப்பகுதியை நானாட்டான் ம.வி பாடசாலை சமூகம் துப்பரவு செய்துள்ளது.
எனவே துப்பரவு செய்யப்பட்ட குறித்த மையப்பகுதியை தொடர்ந்தும் கவனிக்க வேண்டியது நானாட்டான் பிரதேச சபையே...
நானாட்டான் பிரதேச சபையின் தலைவர்,உப தலைவர்,சக உறுப்பினர்களே இது உங்களின் கவனத்திற்கு.
மன்னார் நானாட்டான் மையப்பகுதியை சுத்தப்படுத்திய நானாட்டான் ம.வி பாடசாலை மாணவர்கள்.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 03, 2015
Rating:
No comments:
Post a Comment