மன்னார் ஜிம்றோன் நகர் கிராம மக்களை சிறுநாவற்குளம் பகுதியில் மீள் குடியேற்ற எடுக்கப்படும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு.-Photos
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஜிம்றோன் நகர் கிராம மக்களை மன்னார் சிறுநாவற்குளம் கிராம பகுதியில் மீள் குடியேற்ற மன்னார் பிரதேசச் செயலகம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அதற்கு ஜிம்றோன் நகர் கிராம மக்கள் எதிர்ப்பை தெரிவிப்பதாக அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் ஜிம்றோன் நகர் கிராம மக்கள் தொடர்ச்சியாக ஏற்பட்டு வரும் வெள்ளப்பெருக்கு மற்றும் கடல் நீர் கிராமங்களுக்குள் செல்லுதல் போற்ற காரணங்களினால் பாதிக்கப்பட்டு வருடா வருடம் இடப்பெயர்வை சந்திப்பதாக கூறி குறித்த கிராம மக்களை சிறுநாவற்குளம் பகுதியில் மீள் குடியேற்ற மன்னார் பிரதேசச் செயலகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் ஜிம்றோன் நகர் பொது மண்டபத்தில் மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார் தலைமையில் இன்று வெள்ளிக்கிழமை(6) காலை விசேட கலந்துரையாடல் இடம் பெற்றது.
இதன் போது குறித்த கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
எமிழ் நகர்,ஜிம்றோன் நகர்,ஜீவபுரம் ஆகிய கிராம மக்கள் வருடா வருடம் வெள்ளப்பெருக்கினாலும்,கடல் நீர் கிராமங்களுக்குள் செல்லுவதினாலும் இடம் பெயர வேண்டிய நிலை உள்ளதாகவும்,இதனால் அரசாங்கம் தொடர்ந்து இடம் பெயரும் மக்களை பராமறிக்க முடியாத நிலை உள்ளதாகவும் எனவே முதலில் ஜிம்றோன் நகர் கிராம மக்களை சிறுநாவற்குளம் கிராமத்தில் மீள் குடியேற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பிரதேசச் செயலார் மக்களிடம் தெரிவித்துள்ளார்.
எனினும் அக்கிராம மக்கள் அதற்கு எதிர்ப்புத்தெரிவித்துள்ளனர்.ஒரு சில குடும்பங்கள் மாற்று இடத்திற்குச் செல்ல விரும்பம் தெரிவித்துள்ளனர்.ஏனைய மக்கள் எதிர்ப்பை தெரிவித்து கூட்டம் இடம் பெற்ற மண்டபத்தில் இருந்து வெளியில் வந்தனர்.
கூட்டம் இடம் பெற்ற மண்டபத்தினுள் செய்தி சேகரிக்க பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்த குமார் அனுமதி வழங்கவில்லை.
இந்த நிலையில் பிரதேசச் செயலாளருடன் இடம் பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு வெளியில் வந்த ஜிம்றோன் நகர் கிராம மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,
சுமார் 9 வருடங்களுக்கு மேலாக குறித்த கிராமங்களில் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். எமிழ் நகர்,ஜிம்றோன் நகர்,ஜீவபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 620 குடும்பங்கள் இக்கிராமங்களில் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களின் ஜிம்றோன் நகர் கிராமத்தில் 300 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர்.இக்கிராம மக்கள் அதிகலவானவர்கள் கடல் தொழிலை நம்பியே வாழ்ந்து வருகின்றனர்.
-எனவே எங்களை விவசாயம் செய்யும் பகுதியில் மீள் குடியேற்றினால் நாங்கள் என்ன தொழில் செய்வது என அந்த மக்கள் கேல்வி எழுப்பியுள்ளனர்.
இது மட்டுமின்றி எமக்கு அருகில் உள்ள கிராமங்களான எமிழ் நகர் மற்றும் ஜீவபுரம் ஆகிய கிராம மக்கள் வேறு இடத்தில் குடியேற்ற நடவடிக்கை எடுக்காது ஜிம்றோன் நகர் கிராம மக்களாகிய எங்களை மாத்திரம் சிறுநாவற்குளம் கிராமத்தில் குடியேற்ற நடவடிக்கை எடுத்தமைக்கான காரணம் தமக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 9 வருடங்களுக்கு மேலாக பல்வேறு அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வந்த ஜிம்றோன் நகர் கிராமத்திற்கு தற்போது மின்சாரம்,குடிநீர் வசதிகள் ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே எங்களை வேறு இடத்தில் மீள் குடியேற்ற மேற்கொள்ளும் நடவடிக்கைகளை கைவிட்டு தமது கிராமத்தை வெள்ளத்தில் இருந்தும் கடல் நீர் கிராமங்களுக்குள் உற்செல்ல முடியாத வகையிலும் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜிம்றோன் நகர் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாம் வேறு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும் பட்சத்தில் உரிய தொழில் வசதிகள் இன்றி கஸ்டப்படும் நிலை ஏற்படும் எனவும் பாடசாலை மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் தடைப்படும் எனவும் அந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் ஜிம்றோன் நகர் கிராம மக்களை சிறுநாவற்குளம் பகுதியில் மீள் குடியேற்ற எடுக்கப்படும் நடவடிக்கைக்கு மக்கள் எதிர்ப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
March 06, 2015
Rating:
No comments:
Post a Comment