அண்மைய செய்திகள்

recent
-

வடக்கின் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு உதவிகளை வழங்கும் சாந்தனி பண்டார சலோன்ஸ்


அழகியல் கலை துறையின் முன்னோடியான சாந்தனி பண்டார சலோன்ஸ் மற்றும் 4ever Skin Naturals ஆகியன நியுக்லியஸ் மையத்துடன் இணைந்து வவுனியா, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் மற்றும் முல்லைத்தீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பெண்களுக்கு கலை சம்பந்தமான உதவிகளை வழங்க முன்வந்திருந்தன. சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு, இந்த பிரதேசங்களைச் சேர்ந்த பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு வலுச்சேர்க்கும் வகையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரங்களை அழகியல் துறையில் முன்னெடுத்துச் செல்வதற்கான வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருந்தன. நியுக்லியஸ் மையம் என்பது இலாப நோக்கற்ற சம்மேளனமாகும், இதன் மூலம் திட்டங்கள், பயிற்சிகள் மற்றும் ஆய்வுகள் போன்றவற்றை முன்னெடுப்பதற்கு அவசியமான சேவைகளை வழங்கப்படுகிறது.. 600 க்கும் அதிகமான பெண் தொழில் முயற்சியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் இந்த நிகழ்வில் பங்குபற்றியிருந்தனர். இந்நிகழ்வு வவுனியா நகர சபை மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வுக்கான நிதி பங்களிப்பை USAID அமைப்பு வழங்கியிருந்ததுடன், நியுக்லியஸ் மையத்தினால் நுண் வியாபார அபிவிருத்தி மற்றும் விவசாய உற்பத்தித் திறன் திட்டம் ஆகியவற்றுகமைய முன்னெடுக்கப்பட்டிருந்தன. நியுக்ளியஸ் நிகழ்வின் அழகியல் கலை பங்காளரான 4everSkin Naturals தாபனத்தின் தலைவரும் தாபகருமான திருமதி. சாந்தனி பண்டார கருத்து தெரிவிக்கையில், இந்த பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு பயிற்சிகளை வழங்க முடிந்தமை மிகவும் மகிழ்ச்சியளித்திருந்ததாகவும், கொழும்பை பிரதானமாக கொண்டு இயங்கிய இந்த துறையை தற்போது நாட்டின் வடக்கு பகுதிக்கும் கொண்டு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த பெண்களிடையே காணப்படும் திறமைகள் மற்றும் ஆளுமைகள் மிகவும் மகிழ்ச்சியூட்டுவதாகவும் அமைந்திருந்ததாக குறிப்பிட்டார். வடக்கில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது, தொழில்நுட்பம் மற்றும் 4ever உற்பத்திகள் பற்றிய மாதிரி செயற்பாடுகள், மணப்பெண் அலங்கார போட்டிகள், இலவச சிகை சிகிச்சைகள் மற்றும் பங்குபற்றுநர்களின் குடும்பத்தினருக்கு விநோத நிகழ்வுகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இந்த நிகழ்வில் திருமதி. சாந்தனி பண்டார அவர்கள் பங்கேற்று பிரத்தியேகமான முறையில் விளக்கங்களை வழங்கியிருந்தார். இதன் மூலம் இந்த பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு பெறுமதி வாய்ந்த அறிவு பகிரப்பட்டிருந்தது. மணப் பெண் அலங்கார போட்டியாளர்களுக்கு 4ever Skin Naturals அன்பளிப்பு பொதிகள் வழங்கப்பட்டிருந்தன. கொழும்பிலுள்ள சாந்தனி பண்டார சலூன்ஸ் மூலமாக பயிற்சிப்பட்டறைகள் அதன் தலைமையகத்தில் முன்னெடுக்கப்பட்டிருந்தது. வடக்கு பிரதேசங்களைச் சேர்ந்த சலோன் உரிமையாளர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களுக்கான வெளிப்படுத்தல்கள் பற்றிய விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த துறையின் வளர்ச்சிக்கும், இந்த பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் இந்த செயற்பாடு பயனுள்ளதாக அமைந்திருந்தது. சிகை அலங்காரம், வடிவமைப்பு மற்றும் சரும பாதுகாப்பு மற்றும் அதற்கான ஆளுமைகள் போன்றன மேம்படுத்தப்பட்டிருந்தன. நியுக்லியஸ் மையத்துடனான பங்காண்மை பற்றிய இலக்குகள் தொடர்பில் திருமதி. சாந்தனி பண்டார கருத்து தெரிவிக்கையில், இந்த பெண்களுக்கு வலுவூட்டுவதன் மூலம் நாம் எதிர்பார்க்கும் இறுதி பெறுபேறு என்பது, அவர்களை இந்த தொழிலில் உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதாகும். அதற்கு சிறந்த ஆளுமைகள் மற்றும் அறிவு போன்றன உதவியாக அமைந்திருக்கும் என்பதுடன், அவசியமான ஊக்குவிப்பு மற்றும் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்திக் கொள்ளவும் முடியும் என்றார். நியுக்லியஸ் மையத்தின் சார்பாக திரு. டேவ் மோரிஸ் கருத்து தெரிவிக்கையில், எமது நிகழ்வுகளில் சாந்தனி பண்டார சலூன்ஸ் தாபனத்தை அழகியல் கலை பங்காளராக கொண்டுள்ளமையையிட்டு மிகவும் பெருமையடைகிறோம். நிகழ்ச்சி வெற்றிகரமாக இடம்பெற்றிருந்ததுடன், பங்குபற்றுநர்களிடமிருந்து சிறந்த கருத்துக்களை பெற்றுக் கொள்ள முடிந்தது. பங்குபற்றுநர்கள் தாம் புதிய ஆளுமைகளை பெற்றுக் கொண்டதாகவும், புதிய நுட்பமுறைகளை அறிந்து கொண்டதாகவும் குறிப்பிட்டிருந்தனர். தமது வர்த்தக செயற்பாடுகளில் இந்த நுட்ப முறைகளை பிரயோகிக்க நாம் எதிர்பார்ப்பதாகவும் கூறியதாக குறிப்பிட்டார்.
வடக்கின் பெண் தொழில் முயற்சியாளர்களுக்கு உதவிகளை வழங்கும் சாந்தனி பண்டார சலோன்ஸ் Reviewed by Author on May 11, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.