பிரிட்டனில் ஆட்சியைக் கைப்பற்றியது கன்சவேட்டிவ் கட்சி
'தேர்தலுக்கு முன் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மையை பெறாது, தொழிலாளர் கட்சியே முன்னிலை பெறும்' என்று கூறப்பட்ட நிலையில் பிரித்தானிய பிரதமர் டேவிட் கமெரோனின் கன்சவேட்டிவ் கட்சி, 327 இடங்களில் வெற்றிகொண்டு ஆட்சியமைப்பதுக்கு தேவையான 326 ஆசனங்களை விட ஒரு ஆசனம் கூடுதலாகப் பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதேவேளை, 232 ஆசனங்களை மட்டுமே வென்று தோல்வியை தழுவியுள்ள தொழிலாளர் கட்சியின் தலைவர் எட் மில்லிபாண்ட், இன்று வெள்ளிக்கிழமை பதவியிலிருந்து இராஜினாமா செய்யப்போவதாகவும் கட்சி புதிய தலைவரின் கீழ் கட்டியெழுப்பப்படவேண்டும் என்றும் கூறியுள்ளார். இதேவேளை, கடந்த கூட்டு அரசாங்கத்தில் பிரதித் பிரதமராக பதவி வகித்த லிபரல் ஜனநாயக்கட்சியின் தலைவர் நிக் கிளெக், தமது கட்சி கடந்த தேர்தலில் வென்ற 57 இடங்களிலிருந்து 8 இடங்களாக படுதோல்வியடந்ததை அடுத்து பதவி விலகியுள்ளார். மேலும், கடந்த தேர்தலில் 06 இடங்களை மட்டுமே பெற்ற ஸ்கொட்லாந்து தேசியக் கட்சி இம்முறை ஸ்காட்லாந்தில் உள்ள 59 இடங்களில் 56 இடங்களில் வெற்றிபெற்று கிட்டத்தட்ட முழுமையாக வென்றுள்ளது. ஸ்கொட்லாந்தில் மட்டும் 40 ஆசனங்களை தொழிலாளர் கட்சி இழந்துள்ளது.
பிரிட்டனில் ஆட்சியைக் கைப்பற்றியது கன்சவேட்டிவ் கட்சி
Reviewed by Author
on
May 11, 2015
Rating:

No comments:
Post a Comment