பிலிப்பைன்ஸில் பாதணி தொழிற்சாலையில் பாரிய தீ அனர்த்தம்; 72 பேர் உயிரிழப்பு
பிலிப்பைன்ஸ் தலைநகரின் புறநகரப் பகுதியொன்றிலுள்ள பாதணி தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்தத் தீ அனர்த்தத்தில் குறைந்தது 72 பேர் பலியாகியுள்ளனர்.
இந்தத் தீ அனர்த்தம் காரணமாக அந்தத் தொழிற்சாலை முழுமையாக அழிவடைந்துள்ளது.அந்த தொழிற்சாலையில் ஆரோக்கிய மற்றும் பாதுகாப்பு நியமத் தராதரங்கள் குறித்து உரிய கவனம் செலுத்தப்படாது வந்ததாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.
தொழிற்சாலையில் இடம்பெற்ற பொருத்து வேலையின் போது அந்த தொழிற்சாலை வாசலிலிருந்த தீப்பற்றக் கூடிய இரசாயனங்கள் எரிந்தமை காரணமாகவே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
தீ வேகமாகப் பரவியதால் தொழிற்சாலையில் இருந்த ஒரு சிலரே அங்கிருந்து வெளியேறி தப்பித்துள்ளனர்.
பலர் தொழிற்சாலையிலிருந்த இறப்பர் மற்றும் இரசாயனங்கள் எரிந்தமையால் வெளிப்பட்ட புகையால் மூச்சுத் திணறியே உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் மேற்படி சம்பவம் தொடர்பில் தொழிற்சாலை நிர்வாகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பிராந்திய பொலிஸார் தெரிவித்தனர்.
பிலிப்பைன்ஸில் பாதணி தொழிற்சாலையில் பாரிய தீ அனர்த்தம்; 72 பேர் உயிரிழப்பு
Reviewed by Author
on
May 15, 2015
Rating:

No comments:
Post a Comment