அண்மைய செய்திகள்

recent
-

அணித் தலை­வ­ராக தொடர்ந்தும் அஞ்­சலோ மெத்­தியூஸ்; இரு­ப­துக்கு 20 போட்­டி­க­ளுக்கு மலிங்க!


இலங்கைக் கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்­கெட்டின் அணித் தலை­வ­ராக சகல துறை ஆட்­டக்­கா­ர­ரான அஞ்­சலோ மெத்­தியூஸ் தொட ர்ந்து செயற்­ப­டுவார் என்று இலங்கைக் கிரிக்­கெட்டின் தேர்­வுக்­குழு அறி­வித்­துள்­ளது. அதேபோல் இலங்கை இரு­ப­துக்கு 20 அணியின் தலை­வ­ராக நட்­சத்­திர வேகப்­பந்து வீச்­சாளர் லசித் மலிங்க நிய­மிக்­கப்­பட்­டுள்ளார். எதிர்­வரும் ஜூன் மாதம் ஆரம்­ப­மா­க­வுள்ள பாகிஸ் தான் தொட­ரி­லி­ருந்து அடுத்த ஆண்டு நடை­பெ­ற­வுள்ள இங்­கி­லாந்து தொடர்­வரை ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் தலை­வ­ராக அஞ்­சலோ மெத்­தியூஸ் செயற்­ப­டுவார். அதே போல் 2016 ஆம் ஆண்டு இந்­தி­யாவில் நடை­பெ­றவுள்ள இரு­ப­துக்கு 20 உலகக் கிண்ணம் வரை லசித் மலிங்க இரு­பதுக்கு 20 அணிக்கு தலைமை தாங்­குவார் என்றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. பங்­க­ளா­தேஷில் இறு­தியாக நடை­பெற்ற இரு­ப­துக்கு 20 உலகக் கிண்­ணத்தை லசித் மலிங்க தலை­மை­யி­லான அணி வெற்­றி­கொண்ட பெரு­மை­யோடு 2016 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்திலும் லசித் மலிங்க தலைமையிலான அணி களமிறங்கவுள்ளது.


அணித் தலை­வ­ராக தொடர்ந்தும் அஞ்­சலோ மெத்­தியூஸ்; இரு­ப­துக்கு 20 போட்­டி­க­ளுக்கு மலிங்க! Reviewed by Author on May 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.