அண்மைய செய்திகள்

recent
-

தலைப்பாகையை கழற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றிய சீக்கியருக்கு கிடைத்த பரிசுகள்




நியூசிலாந்தில் சீக்கியர் ஒருவர் விபத்தில் சிக்கிய சிறுவனின் உயிரை காப்பாற்றியதற்காக,அவருக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. கடந்த 17 திகதி நியூசிலாந்து நாட்டின் ஆக்லாந்து நகரில் Daejon Pahia - Age 5 என்ற சிறுவன், தனது சகோதரியுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே வந்த காரில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் துடித்துள்ளான். அந்த சிறுவனின் அழுகுரல் சத்தம் கேட்டு சம்பவ இடத்திற்கு சென்ற Harman Singh - Age 22 என்ற சீக்கியர் , தனது தலைப்பாகையை கழற்றி அச்சிறுவனின் தலையில் கட்டுப்போட்டுள்ளார். பின்னர் உயிருக்கு போராடிய சிறுவனை அருகில் இருப்பவர்களின் துணையுடன் மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளார், அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அச்சிறுவன் உயிர்பிழைத்துள்ளான். இந்த விபத்து சம்பவத்தை நேரில் பார்த்த சுகன் தில்லான் என்பவர் இதனை புகைப்படம் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டார். சீக்கியர்கள் தங்கள் தலைப்பாகையை(டர்பன்) கடவுளுக்கு இணையாக புனிதமாகக் கருதுபவர்கள். அந்த தலைப்பாகையை அவர்கள் எடுப்பதில்லை, அதனுடனேயே இறந்து போகின்றனர், ஆனால் ஒரு உயிரை காப்பாற்ற மத விதிமுறையை மீறி மனிதாபிமானத்தோடு நடந்து கொண்ட அந்த சீக்கியரை இணையதள பயன்பாட்டாளர்கள் புகழ்ந்தனர். இந்நிலையில், ஆக்லாந்தில் வணிகவியல் பட்டப்படிப்பு படித்து வரும் சீக்கியரின் வீட்டிற்கு சென்ற வணிக உரிமையாளர் ஒருவர், அவருக்கு மரச்சாமானால் செய்யப்பட்ட நாற்காலி மற்றும் பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட மேசைகளை பரிசாக அளித்துள்ளார். இந்த பரிசுப்பொருட்களை பெற்றுக்கொண்ட அவர், எனது வாழ்வில் கிடைத்த பெரிய இன்ப அதிர்ச்சி என்று கூறி கண்ணீர் விட்டுள்ளார். மேலும் அச்சிறுவனின் குடும்பத்தார், தங்கள் குழந்தையை காப்பாற்றியதற்காக அவருக்கு பலூன்கள் மற்றும் மலர்களை பரிசாக அளித்து நன்றி தெரிவித்துள்ளனர்.
தலைப்பாகையை கழற்றி சிறுவனின் உயிரை காப்பாற்றிய சீக்கியருக்கு கிடைத்த பரிசுகள் Reviewed by Author on May 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.