இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற இராணுவ வீரரின் இல்லத்திற்கு மைத்திரி விஜயம்
இரண்டாம் உலகப் போரின் போது இரானுவ சிப்பாயாக கடமையாற்றிய தனது பழைய நண்பர் சோமவர்டன வீரசிங்கவை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரில் சென்று நலம் விசாரித்தார்.
பொலநறுவைக்கு நேற்று விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி, தனது நண்பரான சோமவர்டன வீரசிங்கவின் இல்லத்திற்கு சென்று சந்திப்பை மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதியை ஆனந்தக்கண்ணீருடன் திரு.சோமவர்டன வரவேற்றார்.
இதன்போது சில சுவாரஸ்யமான அனுபவங்களை ஜனாதிபதி மைத்திரிபாலவுடன் பகிர்ந்து கொண்டார்.
இரண்டாம் உலகப் போரில் பங்கேற்ற இராணுவ வீரரின் இல்லத்திற்கு மைத்திரி விஜயம்
Reviewed by Author
on
May 25, 2015
Rating:

No comments:
Post a Comment