கேன்ஸ் திரைப்பட விழாவில் இலங்கையரின் கதையைச் சித்தரிக்கும் “தீபன்” திரைப்படத்திற்கு விருது
பிரபல பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஷாக் அவ்தியா(த்) இயக்கிய “தீபன்” திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் விருதை வெற்றிகொண்டுள்ளது.
பிரான்ஸ்சிற்கு அகதித் தஞ்சம் கோரி குடியேறும் மூன்று தனித்தனி ஈழத்தமிழர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கும் வகையில் இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் எழுத்தாளர் ஷோபாசக்தி கதாநாயகனாகவும், தமிழகத்தைச் சேர்ந்த மேடை நாடகக் கலைஞர் காளீஸ்வரி கதாநாயகியாகவும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர்
ஹொலிவுட்டின் முன்னணி திரை நட்சத்திரங்கள் நடித்த திரைப்படங்களுடன் போட்டியிட்டு, புதுமுகங்களும் தொழில்முறை திரைப்பட முன் அனுபவமற்ற நடிகர்களும் நடித்த தீபன் திரைப்படம் இந்த சிறப்பு விருதை வெற்றிகொண்டுள்ளமை ஐரோப்பிய திரை விமர்சகர்கள் பலரையும் பெரும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது
கேன்ஸில் இந்த திரைப்படத்தை பார்த்த முன்னணி திரை விமர்சகர்கள் பலரும் இந்த திரைப்படத்தையும், ஷோபாசக்தி மற்றும் காளீஸ்வரியின் நடிப்பையும் பெரிதும் பாராட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கேன்ஸ் திரைப்பட விழாவில் இலங்கையரின் கதையைச் சித்தரிக்கும் “தீபன்” திரைப்படத்திற்கு விருது
Reviewed by NEWMANNAR
on
May 25, 2015
Rating:

No comments:
Post a Comment