அனைத்து கட்சி தலைவர்களுடனும் இன்று ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு
தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழமை அனைத்து கட்சித்தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இப்பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி, ஐ.தே.க. மற்றும் ஜாதிக ஹெல உறுமய உட்பட பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். ஜனாதிபதியுடனான இன்றைய அரசியல் கட்சிகள் நடத்தும் பேச்சுவார்த்தைகளின் பெறுபேறுகள் மற்றும் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) சிறுபான்மை கட்சிகள் உட்பட சிறிய கட்சிகளுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளுக்கமைய தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக தயாரிக்கப்படும் யோசனைகள் எதிர்வரும் 13ஆம் திகதி புதன்கிழமை ஜனாதிபதி தலைமையில் இடம்பெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்திலும் முன் வைக்கப்படவுள்ளது. தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக பொது இணக்கப்பாடு காணப்படா விட்டால் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலை நடத்தவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். தற்போது உள்ள முறைமையிலேயே அப்போது பொதுத்தேர்தல் நடத்தப்படுமென்றும் ஜனாதிபதி முடிவெடுத்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் இன்று கட்சித் தலைவர்களுடன் இடம்பெறும் கூட்டமே பெரும்பாலும் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான இறுதிக் கூட்டமாக அமையலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஐ.தே. கட்சியும் ஜே.வி.பி. யும் சுதந்திரக்கட்சியின் மஹிந்த அணி மற்றும் மைத்திரியின் சுதந்திரக்கட்சி அணியும் பொதுத்தேர்தலை நடந்த வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்தி வருகின்றது. சுதந்திரக்கட்சியின் இரு அணிகளும் தேர்தல் முறைமை மாற்றத்தின் பின்னரே பொதுத்தேர்தல் நடத்தப்படவேண்டுமென்று வலியுறுத்தி நின்றாலும் ஜே.வி.பி. சிறுபான்மை இன மற்றும் சிறிய கட்சிகள் தற்போதுள்ள முறைமையிலேயே பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டுமென்றும் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வாறானதோர் சூழ்நிலையில் தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பாக பொது இணக்கப்பாடு காணப்படாவிட்டால் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தற்போதைய தேர்தல் முறைமைக்கமைய பொதுத்தேர்தலை நடந்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
அனைத்து கட்சி தலைவர்களுடனும் இன்று ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு
Reviewed by Author
on
May 11, 2015
Rating:

No comments:
Post a Comment