
அமெரிக்க நாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட கைதி ஒருவன் அங்குள்ள இரும்பு ஆணி, குண்டூசி, தோல் பட்டைகளை உணவாக உண்டு வருவது பொலிசாரை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.
Lamont Cathey என்ற 17 வயது வாலிபர் ஒருவர், கடையில் பணம் திருடிய குற்றத்திற்காக 16 மாதங்களுக்கு முன் பொலிசாரால் கைது செய்யப்பட்டார்.
கைதியிடம் பொலிசார் விசாரணை நடத்தியதில் அவர் ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, நீதிமன்றம் விதித்த 5 ஆயிரம் டொலர்கள் பிணையதொகையை செலுத்த முடியாததால் Illinois நகரில் உள்ள Cook County தடுப்பு முகாமில் அந்த வாலிபர் அடைக்கப்பட்டார்.
முகாமில் அடைக்கப்பட்டதும் அந்த வாலிபர் அங்கு கிடந்த ஆணிகள், இரும்பு திருகுகள், குண்டூசிகள், தோல் பட்டைகளை உண்பதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.
கைதியின் செயலை கண்டு அதிர்ச்சி அடைந்த பொலிசார், அவருக்கு மருத்துவ சிகிச்சை அளித்தனர். ஆனாலும், அந்த கைதி தனது பழக்கத்தை விடவில்லை.
சிறைக்கைதியின் இந்த நடவடிக்கையால், அவருக்கு சுமார் 20 முறை சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் சில சிகிச்சைகளில் அவரது குடல் பகுதிகளில் இருந்து இரும்பு பொருட்களை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளதாக அந்த தடுப்பு முகாமின் இயக்குனரான Cara Smith தெரிவித்துள்ளார்.
கைதிக்கு சிகிச்சை அளித்த வகையில், பொலிஸ் துறைக்கு சுமார் ஒரு மில்லியன் டொலர்கள் செலவாகியுள்ளது.
மனநலம் பாதிக்கப்பட்ட கைதிகளை சிறை தடுப்பு முகாம்களில் அடைத்து வைத்திருப்பதால் நிர்வாக அதிகாரிகளுக்கு மன உளைச்சலும், நிர்வாகத்திற்கு தேவையில்லாத செலவுகளை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மனநலம் பாதிக்கப்பட்டு தடுப்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள கைதிக்கு உளவியல் ரீதியான சிகிச்சை அளிக்க வேண்டும் என அவரது வழக்கறிஞர் வலியுறுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment