அண்மைய செய்திகள்

recent
-

8000 அண்டுகளுக்கு முன் மண்ணில் புதைந்த அரிய மண்டையோடுகள்





நோர்வே நாட்டில் கற்கால மனிதனின் மண்டையோடு தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நோர்வே தலைநகர் ஓஸ்லோவின் தென்மேற்கு பகுதியில் ஸ்டோக் என்னும் இடத்தில் சுமார் 8,000 ஆண்டு முந்தைய கற்கால மனிதனின் மண்டையோட்டை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இப்பகுதியில் கடந்த 2 மாத காலமாக ஆய்வு நடத்தி வந்த ஆய்வாளர்கள், இங்கு கற்கால மனிதர்களின் இரண்டு குடியிருப்புகள் இருந்ததாக தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இங்கு வேறு சில பொருட்கள் கிடைத்தாலும், இந்த மண்டை ஓட்டில் இருக்கும் சில மூளைப் பகுதிகள் கற்கால வாழ்வாதார நிலைகளைப் பற்றி அறிந்து கொள்ளும் ஆய்வுக்கு உதவியாக இருக்கும் கூறப்படுகிறது. மேலும் ஆய்வாளர்களுக்கு கிடைத்த எலும்பு ஒன்று, மனிதன் அல்லது விலங்கினுடைய தோள்பட்டையாகவோ, இடுப்பெலும்பாகவோ இருக்கலாம் என கருதப்படுகிறது. இதுகுறித்து ஆய்வுக் குழுவின் தலைவர் கவுடே ரெய்டன் கூறுகையில், நாம் அதிகம் அறிந்திராத கற்கால மனிதர்கள் வாழ்ந்த பகுதியில் அகழ்வுப் பணியில், இதுபோன்றவை பொருட்கள் கிடைப்பது மிக அரிதானது என்றும் இந்த மண்டையோட்டின் உட்புறத்தில் சாம்பல் நிறத்தில் களிமண்ணைப் போன்ற வஸ்து உள்ளது எனவும் தெரிவித்துள்ளார். இதேபோல் இங்கு ஏற்கெனவே கிடைத்துள்ள எலும்புகளை ஆய்வு செய்ததில், அவை கி.மு 5,900ம் காலத்தைச் சேர்ந்தவை எனத் தெரியவந்துள்ளது.
8000 அண்டுகளுக்கு முன் மண்ணில் புதைந்த அரிய மண்டையோடுகள் Reviewed by Author on May 25, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.