
எயர் கனடாவில் 37 வருடங்களாக விமான ஓட்டியின் அறையில் பணிபுரிந்த கனடாவின் முதல் பெண் விமானி தனது பதவியிலிருந்து ஒய்வு பெறுகிறார்.
எயர் கனடாவில் பணிபுரிந்த ஜூடி கமரன் என்ற இவர், 1978ல் தனது 24 வயதில் விமானியாக பதவி ஏற்றார்.
அத்தருணத்தில் முதல் பெண் விமானியாக கமரன் பதவி ஏற்றது ஒரு திருப்பு முனையாக அமைந்ததால் தலைப்பு செய்தியாக பேசப்பட்டது.
ஞாயிற்றுகிழமை Munich-ல் இருந்து பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தரையிறங்கிய கமரன் தனது இறுதி மரியாதைக்கு அறிகுறியான தலைவணக்கத்தை தெரிவித்தார்.
பின்னர் பேசிய அவர், தனது 37 வருடகால பதவியை தான் மிக பெரிய அளவில் நேசித்ததாகவும், எதிர்வரும் காலங்களில் அதிக அளவிலான பெண் விமானிகள் உருவாக வேண்டும் என விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
மேலும், தற்சமயம் 5 சதவிகிதமான பெண் விமானிகளே உள்ளதாக கூறப்படுகிறது.
No comments:
Post a Comment