பொலிஸ்காரரின் கண் பார்வையை பறித்த மில்லரின் சிக்ஸர்
ஐ.பி.எல். தொடரில் டேவிட் மில்லர் சிக்ஸர் அடித்த பந்து தாக்கியதில் மைதானத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தரின் கண் பார்வை பறிபோனது. கடந்த மே 9ஆம் ஆம் திகதி ஈடன் கார்டன் மைதானத்தில் கொல்கத்தா அணி பஞ்சாப் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் பஞ்சாப் அணி வீரர் டேவிட் மில்லர் 11 பந்துகளில் 27 ஓட்டங்களைக் குவித்தார். ரசல் பந்தில் மில்லர் அடித்த சிக்ஸர் ஒன்று மைதானத்தில் இருந்த அலோக் ஏய்ச் என்ற பொலிஸ் உத்தியோகத்தரின் கண்ணை நேரடியாக வந்து தாக்கியது. பந்து தாக்கிய வேகத்தில் அவரது வலது கண்ணில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அலோக்கை மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அலோக் கண்பார்வை இழந்து விட்டதாக தெரிவித்தனர். தற்போது 53 வயதான அலோக்கு இந்த சம்பவத்தையடுத்து வேறுவிதமான பணி கொடுப்பது குறித்து கொல்கத்தா பொலிஸ் அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் கங்குலி இது குறித்து கூறுகையில்இ இது எதிர்பாராதவிதமாக நடந்த சம்பவம். இதற்கு டேவிட் மில்லர் பொறுப்பாக மாட்டார் என்றார்.
பொலிஸ்காரரின் கண் பார்வையை பறித்த மில்லரின் சிக்ஸர்
Reviewed by Author
on
May 15, 2015
Rating:

No comments:
Post a Comment