
இணையதளங்கள் மூலமாக குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்துபவர்களுக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய திட்டத்தை பிரதமர் கேமரூன் அறிவிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குழந்தைகளை பாலியல் துன்புறுத்தலில் ஈடுபடுத்துவது போன்ற புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளங்களில் பரப்பி வருவது தொடர்பான புகார்கள் அரசிற்கு தொடர்ந்து வந்துள்ளது.
இந்த குற்றங்களில் ஈடுபடுபவர்கள் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி சிறிய தண்டனை அல்லது தண்டனையே இல்லாமல் தப்பி விடுகின்றனர்.
குழந்தைகளின் எதிர்காலத்தை சீரழிக்கும் இதுபோன்ற குற்றங்களை முற்றிலும் தடுக்கும் வகையில், பிரித்தானியாவின் புதிய அமைச்சரவை கடுமையான திட்டங்களை அமல்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதில் முக்கிய அம்சமாக, இணையதளங்கள் மூலமாக குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்பறுத்துபவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாமல் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய திட்டத்தை பிரதமர் கேமரூன் நடைமுறைப்படுத்த உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த புதிய திட்டம் குறித்தான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, இன்னும் சில தினங்களில் பிரித்தானிய ராணியான இரண்டாம் எலிசபெத் அளிக்க உள்ள ‘புதிய அமைச்சரவையின் சட்டமியற்றும் திட்டங்கள்’ உரையில் இடம்பெற உள்ளது.
இந்த புதிய திட்டங்கள் மூலம், குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்களுக்கு வழங்கப்படும் சிறை தண்டனை இரட்டிப்பு செய்யப்படும்.
இந்த கடுமையான திட்டங்களை அறிமுகப்படுத்துவதின் மூலம், தற்போதிய கன்சேர்வேட்டிவ் அரசு சமூக நீதியை காப்பதுடன், சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உறுதுணையாக செயல்படுவதாக அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment