திடீர் மாரடைப்பால் கால்பந்தாட்ட வீரர் பலி
கால்பந்தாட்ட போட்டியின் போது ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக பெல்ஜியம் நாட்டு வீரர் உயிரிழந்துள்ளார். பெல்ஜியம் கால்பந்து அணியைச் சேர்ந்த 23 வயதான டிம் நிகாட் என்பவரே பரிதாபமாக உயிரிழந்தவராவார். ஹெமிக்செம் என்ற இடத்தில் நடந்த உள்ளூர் போட்டியில் வில்ரிஜ்க் அணிக்காக டிம் நிகாட் விளையாடினார். அதன்போது திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக மயங்கி விழுந்த டிம் உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கோமா நிலையில் இருந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதேவேளை கடந்த மே முதலாம் திகதியும் 24 வயதுடைய பெல்ஜியம் வீரர் கிரிகரி மார்டென்ஸ் ஜென்க் அணிக்கு எதிராக விளையாடிய போது மாரடைப்பு காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.
திடீர் மாரடைப்பால் கால்பந்தாட்ட வீரர் பலி
Reviewed by Author
on
May 12, 2015
Rating:

No comments:
Post a Comment